தளபதி 63 பட துணை நடிகை பரபரப்பு புகார்: அட்லி விளக்கம்

By Siva

Recommended Video

Actor Atlee Thalapathy 63: அட்லீ விஜயை துரத்தும் பிரச்சனை

சென்னை: துணை நடிகை கிருஷ்ண தேவி அளித்துள்ள புகார் குறித்து இயக்குநர் அட்லி விளக்கம் அளித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் துணை நடிகை கிருஷ்ண தேவி என்பவர் அட்லி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் அட்லி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

துணை நடிகை

துணை நடிகை

கிருஷ்ண தேவி தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது, "ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்

தாக்குதல்

அட்லியும் அவரது உதவியாளர்களும் திட்டியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு சுத்தமான உணவு ஏன் கொடுக்கவில்லை என்று நான் கேள்வி கேட்டதற்கு அட்லி கண் முன்பே அவரது உதவி இயக்குநர் என்னை தாக்கினார் என்கிறார் கிருஷ்ண தேவி.

அட்லி

அட்லி

கிருஷ்ண தேவி கூறியதில் உண்மை இல்லை. அது பொய் புகார் என்று அட்லி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய் புகார் என்றால் அந்த நடிகை எப்படி தைரியமாக போலீஸ் வரை செல்வார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

காயம்

காயம்

கிருஷ்ண தேவி புகார் ஒரு பக்கம் இருக்க தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் ஃபோகஸ் லைட் கீழே விழுந்து எலக்ட்ரீஷியன் செல்வராஜ் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X