கொரோனா நிதி.. சத்தம் காட்டாமல் அட்லி செய்த உதவி.. பாராட்டும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்காக இயக்குநர் அட்லி 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

Recommended Video

Breaking! Raghava Lawrence again proved his humanity | Chandramuki 2

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் கைகோர்த்த அட்லி தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. விரைவில் 1 லட்சத்தை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில்

இந்தியாவில்

அதேபோல இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. சுமார் 5 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 169பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. லாக் டவுனை நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

கொரோனா நிதி

கொரோனா நிதி

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனால் பாதிக்கப்படுபவர்களின் நிலை அறிந்து, சினிமா பிரபலங்களும் தாராளமாக கொரோனா நிதி வழங்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக ராகவா லாரன்ஸ் 3 கோடி ரூபாயும், தல அஜித் 1.25 கோடி நிதியும் இதுவரை வழங்கி உள்ளனர்.

அட்லி உதவி

அட்லி உதவி

அதிகளவில் நடிகர்களே கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் அட்லி 10 லட்சம் ரூபாய் நிதியளித்துள்ளார். FEFSI தொழிலாளர்களுக்கு 5 லட்சமும், இயக்குநர்கள் சங்கத்திற்கு 5 லட்சமும் அட்லி நிதியளித்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளன.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

இயக்குநர் அட்லி, கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த விஷயம் அறிந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில், அட்லியை பாராட்டி வருகின்றனர். சும்மாவா தளபதி விஜய்யை வைத்து, தெறி, மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் ஆயிற்றே..

ஷாருக்கானுடன்

ஷாருக்கானுடன்

இந்த ஏப்ரல் மாதத்தில் தான் அட்லி - ஷாருக்கான் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கொரோனா கலவரத்தால் எந்தவொரு புதுப்படமும் தொடங்க முடியாமல் போய்விட்டது. நல்ல கதைக்காக கடந்த 2 வருடங்களாக காத்திருந்த ஷாருக்கான், இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X