Atlee Speech: ஜன நாயகன் மேடையில் பேச பேச அழுத அட்லீ.. ஒரு நிமிஷத்துல மொத்த ரசிகர்களையும் மெல்ட் ஆக்கிட்டாரு

மலேசியா: தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது, டிசம்பர் 12ஆம் தேதி மலேசியாவில் உள்ள புக்கட் கலீல் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அட்லீ, அவர் பேச பேச அழுதது மட்டும் இல்லாமல், லட்சக்கணக்கில் திரண்டு இருக்கும் ரசிகர்களையும் மெல்ட் ஆக்கிவிட்டார். அட்லீயின் பேச்சு தொடர்பான சமூகவலைதளப் பதிவுகளை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

அதாவது, அட்லீ பேசும்போது, " தளபதி, என்னோட தளபதி, என்னோட அண்ணன். இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் நடிகர்களை எப்படிப் பார்ப்பார்கள் எப்படி மதிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் தளபதி எல்லோருக்கும் ஒரு எமோஷன். நான் அவருடன் படம் பண்ணும் போது, அதற்கு முன்னர் நான் ஒரு படம் தான் பண்ணியிருந்தேன். நான் மட்டும் அல்ல, நெல்சன், லோகி உள்ளிட்ட நாங்கள் எல்லாம் அப்படித்தான். அதற்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து, அதற்கு ஒரு படம் கொடுத்தார்.

Atlee Emotional Speech About Thalapathy Vijay At Jana Nayagan Audio Launch

எமோஷனல்: இன்றைக்கு என்னிடத்தில் என்னவெல்லாம் உள்ளதோ, அதாவது எதை வேண்டுமானாலும் சொல்லலாம். என்னிடத்தில் என்ன உள்ளதோ, அது அனைத்திற்கும் காரணம் என் தளபதி, என் விஜய் அண்ணா மட்டும் தான். ( இவ்வாறு பேச பேச லேசாக கண் கலங்குகிறார். ஒன் லாஸ்ட் டைம் என்று நீங்கள் சொல்வதை எப்படி டிஃபைன் செய்வது என்று தெரியவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை விஜய்குமார் ஐ.பி.எஸையும் ஒன் லாஸ்ட் டைம் ஆகத்தான் செய்தார், தளபதி வெற்றி மாறனையும் ஒன் லாஸ்ட் டைமாகத்தான் செய்தார், ராயப்பனையும் ஒன் லாஸ்ட் டைம் ஆகத்தான் செய்தார். அதேபோல ஜன நாயகனையும் ஒன் லாஸ்ட் டைமாகத்தான் செய்வார் என்று நினைக்கிறேன்.

ரசிகர்கள்: நான் எல்லாம் ஒன்றுமே கிடையாது, அவர் இருந்த உயரத்திற்கு. நான் இயக்குநர் ஆகும்போது தளபதி 50 படங்கள் நடித்துவிட்டார். நான் ஒரு உதவி இயக்குநர். என்னை அழைத்து, அட்லீ நீங்கள் நன்றாக பணியாற்றுகிறீர்கள். உங்களிடத்தில் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று தெரிவித்தார்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்படும் ஒரு பேச்சாக உள்ளது.

Atlee Emotional Speech About Thalapathy Vijay At Jana Nayagan Audio Launch
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X