Atlee: “ஆத்தா நான் பாஸாகிட்டேன் மொமண்ட்...” ஜவான் சூப்பர் ஹிட்... அட்லீயின் ரியல் சம்பவம்!

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது ஜவான்.

இந்நிலையில், ஜவான் படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

முக்கியமாக இயக்குநர் அட்லீக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

 Atlee: Fans praised Atlee for the success of Shah Rukh Khans Jawan

ஜவான் அட்லீயின் ரியல் சம்பவம்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான், இன்று உலகம் முழுவதும் வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஜவான், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்தியில் உருவாகியுள்ள ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது. ஆனால், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளதால், கோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் மூலம் 50 கோடி ரூபாய் வசூலித்தது ஜவான். இந்நிலையில் இன்று வெளியான ஜவான் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

அதேபோல், ஜவான் படத்தில் அட்லீயின் மேக்கிங் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கானின் இன்ட்ரோ சீன் செம்ம மாஸ்ஸாக இருப்பதாகவும், அவருக்கு இப்படியொரு தரமான கேரக்டர் இதுவரை அமைந்தது இல்லை எனவும் கூறியுள்ளனர். இண்டர்வெல் ப்ளாக்கில் சூப்பர் ட்விஸ்ட் வைத்துள்ளதும் படத்துக்கு பக்காவாக செட்டாகியுள்ளது என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சண்டைக் காட்சிகளில் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஹீரோயிசத்தை சரியாக பயன்படுத்தியுள்ளார் என கூறியுள்ளனர். அதேபோல், நயன்தாராவின் கேரக்டரும், அவரது ஸ்டைலிஷான ஆக்டிங்கும் ஜவான் படத்தில் ஒர்க்அவுட் ஆகியுள்ளது. முக்கியமாக ப்ளாஷ்பேக்கில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் இருவருக்குமான எமோஷனல் சீன்ஸ் அட்லீயின் ட்ரேட் மார்க் எனவும் தெரிவித்துள்ளனர்.

முதல்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து தரமான சம்பவம் செய்துவிட்டார் என கோலிவுட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல், ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல், கண்டிப்பாக ஆயிரம் கோடியை தாண்டும் எனவும் சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X