விஜய்க்காக அண்ணாமலை படத்தை டிங்கரிங் செய்யும் அட்லி
சென்னை: விஜய்யின் அடுத்த படத்திற்கு அட்லி எந்த படத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
பல படங்களை பார்த்துவிட்டு அவற்றை கலாய்த்து படம் எடுத்தால் அது சி.எஸ். அமுதன். அதே போன்று பல படங்களை பார்த்து இன்ஸ்பயர்(கதையை சுட்டு) ஆகி டிங்கரிங் செய்து புதுப் பொலிவுடன் படம் எடுத்தால் அது அட்லி.
ராஜா ராணி படத்தை அடுத்து தொடர்ந்து விஜய்யை வைத்து படம் எடுக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.

கால்ஷீட்
விஜய்யை வைத்து படம் எடுப்பதை தங்களின் வாழ்க்கையின் லட்சியமாக நினைக்கும் இயக்குனர்களுக்கு எல்லாம் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. விஜய்யை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்க மீண்டும் அட்லிக்கே வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய். விஜய் மீண்டும் அட்லியை தேர்வு செய்திருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும்.

அட்லி
விஜய்யை வைத்து படம் எடுக்க ஒரு ஐடியா கிடைத்துள்ளது என்றார் அட்லி. அதை கேட்ட நெட்டிசன்களோ, எதற்காக விஜய்யிடம் கதை சொல்லி நேரத்தை வீணடிக்கிறீர்கள். எந்த படம் என்று முடிவு செய்துள்ளீர்களோ அதன் டிவிடியை கொடுத்தால் அவரே பார்த்துக் கொள்வார் என்று கலாய்க்கத் துவங்கிவிட்டனர். கோடம்பாக்கத்துக்காரர்களும் இப்படித் தான் அட்லியை கலாய்க்கிறார்கள்.

அண்ணாமலை
ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அண்ணாமலை படத்தை தான் டிங்கரிங் செய்து தன் கதை போன்று மாற்றி படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் அட்லி. யாரும் அதை காப்பி என்று சொல்லப்படாது. அதற்கு பெயர் இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பது. ரஜினிக்கு கை கொடுத்த அண்ணாமலை விஜய்க்கும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசனங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நேரத்தில் அண்ணாமலை படத்தில் வந்த பல வசனங்கள் அந்த இரும்பு பெண்மணிக்காக எழுதப்பட்டவை. விஜய்யை அரசியலுக்கு வந்து சீக்கிரமாக முதல்வராகுமாறு அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நேரத்தில் இப்படி ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார்.


Click it and Unblock the Notifications











