வீரமுத்துவேல் சார் படிச்ச இந்த கல்லூரியில்தான்.. அட்லீ போட்ட உலகமகா பிட்டு.. பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீயின் பேச்சை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வர காரணமே தேவையில்லாமல் சந்திரயான் விஞ்ஞானி வீரமுத்துவேலை உள்ளே கொண்டு வந்து பேசியது தான் என்கின்றனர்.

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் பண்ண காரணமே என் அண்ணன் தளபதி தான் என பெரிய பிட்டை போட்டு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஜவான் படத்தின் டிரெய்லர் மற்றும் படத்தை பெரிய ரீச்சுக்கு கொண்டு போகும் வேலையை பார்த்து விட்டார்.

Atlee gets trolled for Chandrayaan Scientist Veeramuthuvel college dialogue at Jawan event

மேலும், தனது மனைவி கர்ப்பமாக இருந்த போதும் ஜவான் தான் முக்கியம் என சென்னைக்கும் மும்பைக்கும் டவுன் பஸ்ஸில் ட்ரிப் அடித்தது போல போயிட்டு வந்தேன் என்றெல்லாம் பேசி ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்து விட்டார் அட்லீ.

வீரமுத்துவேல் சார் படிச்ச கல்லூரியில: சினிமா படங்களை தான் மற்ற படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கிறார் அட்லீ என்று பார்த்த ரசிகர்களுக்கு ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சை கேட்டு இதையும் பக்காவா பிளான் பண்னி சுட்டுத்தான் எடுப்பீங்களா ப்ரோ என கேட்கும் அளவுக்கு பேசியுள்ளார்.

இயக்குநர் அட்லீயின் ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களாகவே போட்டு கலாய்த்து வருகின்றனர். சந்திரயான் 3 ப்ராஜெக்ட் இயக்குநர் வீரமுத்துவேல் சார் படிச்ச கல்லூரியில் தான் ஜவான் படத்தின் விழாவை நடத்த வேண்டும் என முடிவு பண்ணினேன் என அட்லீ பேசியதை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Atlee gets trolled for Chandrayaan Scientist Veeramuthuvel college dialogue at Jawan event

டைம் டிராவல் பண்ணாரோ: "வீரமுத்துவேல் சார் படிச்ச இந்த கல்லூரியில்தான் "ஜவான்" ஆடியோ ஈவண்ட் நடத்த முடிவு செய்தேன் ~ அட்லீ

~ அதாவது, போனவாரம் மீடியால பிரபலமான மனுஷன் படிச்ச காலேஜ்ல வைக்கணும்னு, ஒரு மாசம் முன்னாடியே பிளான் போட்டே. அப்டிதானே?

ஆமாயா.. டைம்ட்ராவல் பண்ணி முன்கூட்டியே கண்டுபிடிச்சு, புக் பண்ணேன்யா." என மீம் போட்டு அட்லீயின் அந்த ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X