சர்தார் பாதி மணி ஹெயிஸ்ட் மீதி.. ஜவான் டிரெய்லரை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. பாவம்பா அட்லீ!
சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்துள்ள ஜவான் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங்கை திணறவிட்டு வருகிறது.
இந்த படத்தின் டிரெய்லரை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், இன்னொரு பக்கம் மறுபடியும் அப்பன் மவன் கதையோட அட்லீ வந்துட்டாரா என்றும் இதை பார்க்க அப்படியே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தை போலவே இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர்.
மேலும், அந்த 6 பொண்ணுங்க ஷாருக்கானுக்கு உதவி செய்றாங்க போன்ற வசனங்களை பார்த்த ரசிகர்கள் மணி ஹெய்ஸ்ட்டில் இருந்து தப்பி அட்லீ சுட்டுட்டாரா என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
பதானை விட பல மடங்கு மிரட்டுதே: ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படம் அப்படியே பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தை பார்த்தது போல இருந்தது என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், ஜவான் படத்தில் அப்பா, மகன் என ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் தெறிக்கவிட்டு இருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

அப்பா ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் மகன் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடி என்பது டிரெய்லரிலேயே தெளிவாக தெரிகிறது. ரொம்பவே பிரம்மாண்டமாக காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளார் அட்லீ என்பது உறுதியாகி உள்ள நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடியை அசால்ட்டா தாண்டி புதிய உச்சத்தை இந்த ஆண்டு பாலிவுட்டுக்கு கொடுக்கும் என்பது தெரிகிறது.
விஜய்சேதுபதி தாறுமாறு: யங் லுக்கிலும் வயசான டான் லுக்கிலும் விஜய்சேதுபதி ஜவான் படத்தில் மிரட்டல் வில்லனாக மாறி வெறித்தனம் காட்டியுள்ளார் என அவரது ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்துப் போட்டு மக்கள் செல்வன் தனி டிரெண்டிங்கையே தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை பாலிவுட் ஹீரோக்களுக்கு நான் வில்லனா போனா அங்கேயும் நான் ஹீரொவாகவே கெத்துக்காட்டுவேன் என்பதை தனது நடிப்பால் நிரூபித்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
சர்தார் காப்பி: "Sardar ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.." என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷாருக்கானின் ஜவான் படத்தை காப்பி படம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இயக்குநர் அட்லீக்கு விஜய் ரசிகர்கள் முழு ஆதரவை கொடுத்து வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் அட்லீ மற்றும் ஷாருக்கானின் ஜவான் படத்தையும் ட்ரோல் செய்து வருகின்றனர். டிரெய்லரில் அப்பா ராணுவ வீரன், மகன் போலீஸ்காரன் என்பதை அறிந்த நிலையில், இரு கதைகளும் ஒரே கதையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மணி ஹெய்ஸ்ட் பிளஸ் துணிவு: அட்லீ நான் ஷங்கர் பரம்பரை டான்னு படத்தை பிரம்மாண்டமாக காட்டினாலும் சர்தார் + மணி ஹெய்ஸ்ட் + துணிவு சாயலில் படம் இருக்கு என ரசிகர்கள் இந்த முறையும் அட்லீ பல படங்களில் இருந்து காட்சிகளையும் கதைகளையும் தனது பாணியில் இன்ஸ்பயர் ஆகி எடுத்துள்ளார் என்றும் காப்பியடித்து கலக்கி உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











