அல்லு அர்ஜூன் படத்திற்கு கோடியில் சம்பளம் கேட்ட அட்லீ.. முன்வராத தயாரிப்பாளர்கள்.. தாமதமாகும் படப்பிடிப்பு!

சென்னை: ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி, பாலிவுட்டின் மிகவும் வாண்டடான இயக்குனராக மாறிய அட்லீ, சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக செய்தி பரவி வந்தது. ஆனால், இது சில காரணங்களால் தள்ளி போய் இருக்கும் நிலையில், தற்போது, அட்லீ, அல்லு அர்ஜுன் படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்காக அட்லீ கேட்ட சம்பளம் தெலுங்கு தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக மாறினார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார். அதுமட்டுமில்லாமல், இந்த மூன்று படங்களும், விஜய்க்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்றுக்கொடுத்தது.

Atlee salary allu arjun

மாஸ் இயக்குநர்: பிகில் பாடத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ஒரு வெற்றி படத்தை அட்லீ கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலைகள், பாலிவுட் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற வெற்றி படத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி பாலிவுட்டிலும் சிறந்த இயக்குனர் என, அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அட்லீயின் தரம் உயர்ந்துவிட்டது.

அட்லீயின் சம்பளம்: இதன்பின் பாலிவுட்டிலேயே செட்டிலான அட்லீ, விஜய் நடித்த தெறி திரைப்படத்தை இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார். இந்த படத்தில் மூலம் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகம் ஆனார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதன் மூலம் அட்லீக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தயாரிப்பு நமக்கு செட்டாகவில்லை என முடிவு எடுத்த அட்லீ, சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான பட்ஜெட் கட்டுப்படி ஆகாததால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ரொம்ப ஓவர்: தற்போது அட்லீயின் பார்வை, தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியதைத் தொடர்ந்து, அவர் அல்லு அர்ஜுன் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு, அட்லீ 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.அட்லீயின் சம்பளத்தை கேட்ட தயாரிப்பாளர் வாயடைத்துப் போய், பின் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த செய்தியைப்பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X