Atlee - அட்லீயின் அடுத்த பட டிஸ்கஷன்.. அட இவரும் கலந்திருக்காரா?.. க்யூட் வீடியோ ட்ரெண்டிங்
சென்னை: அட்லீ கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிஸியான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மெர்சல் செய்தது. இந்தச் சூழலில் அட்லீ தனது படத்துக்கான டிஸ்கஷனை தொடங்கியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

விஜய்யுடன் பயணம்: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளிவருகின்றன. ஷாருக்கனை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அட்லீ. படத்துக்கு தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வட மாநிலங்களில் செம பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. இதன் காரணமாக மீண்டும் ஒரு படம் அட்லியூடன் செய்ய ஷாருக் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர்: இதற்கிடையே ஹிந்தியில் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார் அட்லீ. அதன்படி கீர்த்தி சுரேஷை வைத்து ஒரு படத்தை தயாரித்துவருகிறார். அதன் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை சுற்றி எத்தனை விமர்சனங்களும் வந்தாலும் பக்கா கமர்ஷியல் இயக்குநர் என்பதை அவர் தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே நிரூபித்துவிட்டார். அதே ஃபார்முலாவைத்தான் தனது அடுத்தடுத்த படங்களிலும் கையாண்டுவருகிறார்.
அடுத்த படம்: ஜவான் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ யாரை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அல்லு அர்ஜுனை அவர் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. பிறகு விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அட்லீயோ விஜய்யையும் ஷாருக்கையும் வைத்து படம் இயக்குவதற்கான கதையை எழுதிக்கொண்டிருப்பதாக சமீபத்தில் ஒரு மேடையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அட்லீ தனது அடுத்த படத்துக்கான டிஸ்கஷனை தொடங்கியிருக்கிறார். அதில் அட்லீயுடன் பாடலாசிரியர் விவேக் மற்றும் உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதில் படு க்யூட்டாக இன்னொருவரும் கலந்துகொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல அட்லீயின் மகன் நீல். அட்லீயின் மனைவி பிரியா வெளியிட்டிருக்கும் வீடியோவில், கதையை பற்றி பிறரிடம் பேசும் அட்லீ தனது மகன் நீலிடம், 'என்ன நீல் ஓகேயா' என்று கேட்கிறார். அதற்கு நீலோ க்யூட்டாக, ஆன் என்று சொல்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகனை இப்போதே களத்தில் இறக்கிவிட்டாரே அட்லீ என்று கமெண்ட்ஸ் செய்வதோடு; அடுத்த பட ஹீரோ யாராக இருப்பார் என்ற கேள்வியையும் எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











