அட்லிக்கு இன்னொரு முகம் இருக்கு..! சிஷ்யனை புகழ்ந்த இயக்குனர் ஷங்கர்!
சென்னை : இயக்குனர் அட்லி தென் இந்தியாவைத் தொடர்ந்து இப்போது பாலிவுட்டில் அதிரடியாக களம் இறங்கியுள்ளார்
ஷாருக் கான் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இயக்குனர் அட்லிக்கு இன்னொரு முகம் இருக்கிறது என இயக்குனர் ஷங்கர் பேசியுள்ளார்.

இரு வேறு காதலை
ஒரு படத்தை வியாபார நோக்கில் எவ்வாறு இயக்குவது என்பது பற்றி அக்குவேறு ஆணிவேராக அறிந்து வைத்திருப்பவர் இயக்குனர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லி குறும்படங்களை இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இரு வேறு காதலை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் மூன்று வேடத்தில்
விஜய் போலீஸ் வேடத்தில் இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான கதை களத்தில் விஜய்யை திரையில் காட்டியிருப்பார் அட்லி. வசூலையும் வாரிக் குவித்தது இந்த படம். தெறி படத்தில் நடிகை மீனாவின் குழந்தை நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். தெறி கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து அடுத்து விஜய் படங்களை இயக்கி வந்தார். விஜய் மூன்று வேடத்தில் நடித்த மெர்சல் மற்றும் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்யை விதவிதமாக நடிக்க வைத்து இதுவரை விஜய்யை எவ்வாறெல்லாம் கண்டு ரசிக்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் தன்னுடைய படங்களில் பார்த்து பார்த்து செதுக்கினார்

ஷாருக்கான்
விஜய் அட்லி கூட்டணி இணைந்தால் அந்த படம் பக்கா மாஸ் என சொல்லப்படும் நிலையில் நான்காவது முறையாக மிக விரைவிலேயே இணைய உள்ளது. தமிழில் சில படங்கள் இயக்கிய நிலையில் இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்கிறார். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தை இப்பொழுது இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், அட்லி பற்றி பேசியுள்ளார்.

இன்னொரு முகம் இருக்கு
அதில் அவர் பேசியதாவது அட்லிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அட்லி முதல் படமாக இயக்கி இருந்தது அழகிய கோயிலே . இதை அட்லியே பல மேடைகளில் கூறியுள்ளார். இப்பொழுது நீங்கள் பார்க்கும் அனைவரையும் என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார் ஆனால் அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது அது மிக விரைவிலேயே வெளிவரும் என தனது சிஷ்யனை மேடையில் புகழ்ந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











