Atlee - ஷாருக்கானையே இயக்கியாச்சு பிறகு என்ன?.. சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய அட்லீ?

மும்பை: Atlee Salary (அட்லீ சம்பளம்) ஜவான் படத்துக்கு பிறகு இயக்குநர் அட்லீ தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

ஆர்யாவை வைத்து ராஜா ராணி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.

Atlee Increased His Salary After Jawan Movie

படத்தின் ரிலீஸ் தேதி: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முதலில் ஜூன் இரண்டாம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

ட்ரெய்லர் செய்த சாதனை: படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. அதேபோல் அவர் இந்தப் படத்தில் ஹீரோவா இல்லை நெகட்டிவ் ஷேடில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் ட்ரெய்லரின் மூலம் எழுந்தது. இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனையும் படைத்தது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: ட்ரெய்லருக்கு அடுத்ததாக படத்திலிருந்து வந்த இடம் என்ற முதல் சிங்கிளும் ரிலீஸானது. பிரமாண்டமாக போடப்பட்டிருக்கும் செட்டில் பல நூறு டான்ஸர்களுடன் ஷாருக்கான் அட்டகாசமாக நடனம் ஆடியிருக்கிறார். ட்ரெய்லரைப் போலவே பாடலும் வெளியான 24 மணி நேரத்தில் பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்திருக்கிறது. இப்படி வரிசையாக சாதனை செய்வதால் படத்தின் வசூலும் பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளத்தை உயர்த்திய அட்லீ: இந்தச் சூழலில் ஜவான் படத்திலிருந்து அட்லீ தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது இதுவரை அவர் 30 கோடியிலிருந்து 35 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றாராம். தற்போது இந்திய அளவில் பிரபலமான ஷாருக்கானை இயக்கிவிட்டதால் தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்க்கு உயர்த்தியிருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.

அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவிருக்கிறார். அதற்காக பத்து கோடி ரூபாய்வரை அட்வான்ஸும் வாங்கிவிட்டாராம். இதனையடுத்து தெறி படத்தை அட்லீ ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகிறார் என்றும் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X