Atlee - இயக்குநராக மட்டுமில்லை தயாரிப்பாளராகவும் படு பிஸியாக இருக்கும் அட்லீ.. முழு விவரம் உள்ளே
சென்னை: Atlee (அட்லீ) இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அட்லீ படு பிஸியாக இருக்கிறார்.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேசமயம் அந்தப் படம் மௌன ராகம் படத்தின் ரீமேக் என்ற விமர்சனமும் எழுந்தது.

விஜய்யுடன் பயணம்: ராஜா ராணி படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அட்லீ விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்ததாக மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். இப்படி இரண்டு படங்கள் வரிசையாக விஜய்யுடன் இணைந்து ஹிட் கொடுத்ததை அடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.
ஜவான்: தமிழில் அவர் மொத்தம் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கினார். அதனையடுத்து பாலிவுட் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். தமிழ்நாட்டில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனஙக்ள் எழுந்தாலும் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதன் காரணமாக பாலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான் கூட அடுத்ததாக அட்லீயுடன் படம் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் அட்லீ: இயக்குநர் அட்லீ இயக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். ஜீவா நடிப்பில் கடந்த ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் தயாரிப்பில் அவரது மோகம் குறையவில்லை.
தயாரிப்பாளராக பிஸி: அந்த வகையில் தமிழில் அவர் இயக்கி வெற்றியடைந்த தெறி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகிறது. அதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். அந்தப் படத்தை அட்லீ தயாரிக்கிறார். அதேபோல் தமிழில் இரண்டு படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறாராம். அநேகமாக தெலுங்கில் அவர் தயாரிக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் படு பிஸியாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் அட்லீ.


Click it and Unblock the Notifications











