அட்லீக்கு மரண அடி கொடுத்த பேபி ஜான்.. நிலைமை இப்படி ஆகிப்போச்சே
மும்பை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ; தற்போது இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராகியிருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து கெத்து காண்பித்தது. இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர் ஹிந்தியில் பேபி ஜான் படத்தையும் தயாரித்திருக்கிறார். இது தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்தப் படம் மௌன ராகத்தின் ரீமேக் என்று விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டாலும் அதன் மேக்கிங் பலரையும் வாய் பிளக்க வைத்தது. அதில் இருந்த ரிச் லுக்கை பார்த்து இந்த இயக்குநர் கண்டிப்பாக தவிர்க்க முடியாத இயக்குநராக வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. மேலும் அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு நாட்கள்வரை தியேட்டரில் ஓடியது.

விஜய்யுடன் பயணம்: முதல் பட ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் சத்ரியன் படத்தின் ரீமேக் என்று குறை சொல்லப்பட்டது. இருந்தாலும் வழக்கம்போல் அந்தப் படமும் மெகா ஹிட்டடித்தது. தெறி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கினார் அட்லீ. இரண்டு படங்களில் மெர்சல் மெகா ஹிட்டடிதது. குறிப்பாக விஜய்க்கு முதன்முறையாக நூறு கோடி வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.
ஹிந்திக்கு சென்ற அட்லீ: ஆனால் பிகில் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் அட்லீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓவராக பேசியதுதான் என்று அப்போது பேச்சுக்கள் கிளம்பின. சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியில் படம் இயக்க சென்றார் அவர். முதல் ஹிந்தி படத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக ஃபிக்ஸ் செய்தார். அவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என தென்னகத்துக்காரர்களை ஒட்டுமொத்தமாக இறக்கினார். படம் மெகா ஹிட்டானது.
அட்லீயின் அடுத்த படம்: ஜவான் வெற்றியால் ஹிந்தியில் அட்லீக்கு நல்ல டிமாண்ட் ஏறியிருப்பதாக தெரிகிறது. அவரும் முழுக்க ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார். மேலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்போடு சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு போதுமான வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேபி ஜான் படம் உருவானதாகவும் ஆனால் படம் 50 கோடி ரூபாயைகூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அட்லீ மிகப்பெரிய அப்செட்டில் இருப்பதாகவும்; இந்த நஷ்டத்தை எதை கொண்டு நேர் செய்வது என்று தனது மனைவி பிரியா மற்றும் நெருங்கிய வட்டாரத்திடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











