அட்லீ கொடுத்த முத்தம்... சந்தோஷமா ஷேர் செய்த பிரியா!
Recommended Video

சென்னை : இயக்குநர் அட்லீ, 'மெர்சல்' படத்தின் அசத்தலான வெற்றிக்குப் பிறகு தனது மனைவியோடு ஜாலியாக உலகம் சுற்றி வருகிறார்.
மெர்சல் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார் விஜய்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில், நடிகர் விஜய், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோரோடு துபாய்க்கு சென்று வந்தார் அட்லீ.

மெர்சல் டூர்
விஜய், அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய்க்கு சென்றது மெர்சல் வெற்றியைக் கொண்டாடுவதற்காகத்தான் எனக் கூறப்பட்டது. ஆனால், மூவர் மட்டும் சென்றிருப்பதால் அடுத்த படத்திற்கான டிஸ்கஷனாக இருக்கலாம் எனவும் சந்தேகத்தைக் கிளப்பியது.

அட்லீ - ப்ரியா
இந்நிலையில், தற்போது, இயக்குநர் அட்லீ அவரது மனைவி பிரியாவுடன் பாரீஸ் நகரத்துக்கு டூர் போயிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா அட்லீ.
அட்லீயின் முத்தம்
பாரீஸ் நகரத்தில் இருக்கும் டிஸ்னி லேண்டில் எடுத்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அட்லீ பிரியாவுக்கு முத்தமிட்டுள்ளார்.
காதல் திருமணம்
காதல் திருமணம் செய்துகொண்ட அட்லீ - ப்ரியா ஜோடியை பார்த்து ரசிகர்களே பொறாமைப்படுவார்கள். இப்போது, 'நம்பமுடியாத தேவதைக் கதை - என் உலகம்' என கேப்ஷனோடு அட்லீ முத்தம் கொடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார் பிரியா.


Click it and Unblock the Notifications