Allu Sirish Wedding: அட்லி முதல் ராம்சரண் வரை.. களைகட்டிய அல்லு அர்ஜுன் தம்பி ரிசப்ஷன்!
ஹைதராபாத்: நல்லவேளை போன மாசமே அல்லு அர்ஜுன் தம்பியின் பர்த்டே பார்ட்டி துபாயில் நடந்து முடித்து விட்டது. அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷின் திருமணம் வரும் மார்ச் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் கொண்டாட்டங்களை வைத்து பிரபலங்களை டயார்ட் ஆக்காமல் ரெஸ்ட் கொடுத்து ரெஸ்ட் கொடுத்து கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்லி கொடுக்கு எனும் நலங்கு விழா நடைபெற்ற நிலையில், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று திருமண வரவேற்பு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

அல்லு அர்ஜுன் படங்களின் இயக்குநர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் உள்ளிட்டோர் ஒன்றாக கலந்து பேசும் காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன. மேலும், பல டோலிவுட் பிரபலங்கள் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தொடர்ந்து அல்லு சிரிஷின் திருமண கொண்டாட்டங்களில் ஜோடியாக இருவரும் பங்கேற்று வருகின்றனர். அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்த புஷ்பா மற்றும் புஷ்பா 2 என இரண்டு படங்களும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகா தொடர்ந்து பங்கேற்று வருகிறார் என்கின்றனர். புஷ்பா 3 படத்தில் விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலை போட்டு வந்த ராம்சரண்: பெத்தி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நடிகர் ராம்சரண் 3 குழந்தைகளுக்கு அப்பாவான சந்தோஷத்தில் இருந்து வரும் நிலையில், சாமிக்கும் மாலை போட்டுள்ளார். தனது நெருங்கிய நண்பரும் உறவினருமான அல்லு அர்ஜுன் மற்றும் அவரது தம்பி அல்லு சிரிஷ் வீட்டு விசேஷத்தில் தான் இல்லாமல் எப்படி என தொடர்ந்து ராம்சரண் பங்கேற்று வரும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் பாண்டையும் அதிகரித்து வருகிறது.
அட்லி முதல் லோகேஷ் கனகராஜ் வரை: அல்லு அர்ஜுன் படங்களை இயக்கிய மற்றும் இயக்கப் போகும் இயக்குநர்களின் சங்கமாகவும் நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. அல்லு சிரிஷ் மற்றும் நைனிகாவை வாழ்த்த வந்த அட்லி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட கோலிவுட் இயக்குநர்களை புஷ்பா பட இயக்குநர் சுகுமார் மற்றும் தனது டோலிவுட் நண்பர்களுக்கு அல்லு அர்ஜுன் அறிமுகப்படுத்திய காட்சிகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. மேலும், பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, நாகார்ஜுனா என ஏகப்பட்ட டோலிவுட் ஜாம்பவான்கள் வருகை தந்தனர்.


Click it and Unblock the Notifications











