சன் பிக்சர்ஸில் படம்.. தளபதி மேல பாசம்.. எங்க அண்ணனுக்காக நாங்க வரோம்.. கலாநிதிமாறன் மீம்ஸ்!
சென்னை: அஜித் குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் விமான வீடியோக்களையும் எடுத்து ஜன நாயகன் ஆடியோ லான்ச்க்கு வராங்க என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ரகளை செய்து கொண்டிருக்கின்றனர். ஜன நாயகன் படத்துடன் போட்டி என அறிவித்த பராசக்தி படத்துக்கு கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சை, சென்சார் சர்ச்சை என அந்த படக்குழுவுக்கு ஏகப்பட்ட சோதனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஆண்டு கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஜெயிலர் 2, அல்லு அர்ஜுன் படங்களை இயக்கி வரும் நெல்சன் மற்றும் அட்லி உள்ளிட்ட இயக்குநர்கள் தளபதி கச்சேரியை தாறுமாறாக கொண்டாட மலேசியா பறந்துள்ளனர்.

இந்நிலையில், ஜன நாயகன் தொடர்பான மீம்ஸ் மற்றும் கலாநிதி மாறன் ரியாக்ஷன் என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் களைகட்டி வருகின்றன.
மலேசியா முருகன் கோயிலில் அலகு குத்தப்போறேன்: "Jailer2 shooting spot... நெல்சன்: பாஸ் ஒரு 2நாள் லீவு வேணும்
கலாநிதி மாறன்: எதுக்கு?
நெல்சன்: திமுக ஜெயிக்கணும்னு மலேசியால உள்ள முருகருக்கு அலகு குத்துறதா வேண்டிருக்கேன் அதான் பரிகாரம் பண்ணனும்...
மலேசியா விமானத்தோட நிலைமை இதுதான்: விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில், மாப்பிள்ளை விருமாண்டி வீட்டு விருந்துக்கு செல்கிறோம் என ஒரு கூட்டமே ஒரு பேருந்தில் உள்ளேயும் மேலயும் ஏறி அமர்ந்துக் கொண்டு ரகளையாக செல்லும் வீடியோவை ஷேர் செய்து மலேசியா விமானத்தின் நிலை இதுதான் என பதிவிட்டுள்ளார். மேலும், அதில், அட்லி, நெல்சன் உள்ளிட்டோர் இடம்பெறும் இடமெல்லாம் வேறலெவல் ஃபன்.
கலாநிதி மாறன் ரியாக்ஷன்: "அட்லி :- சார் AA22 -க்கு Location பாக்க மலேசியா வரை போகனும்..
நெல்சன் :- சார் ஜெய்லர் 2 -க்கு Location பாக்க மலேசியா வரை போகனும்.. ~கலாநிதிமாறன்" ரியாக்ஷன் என பதிவிட்டுள்ள மீம் ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்துள்ளது. போகிற போக்கை பார்த்தால் பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயனும் மலேசியாவில் நடக்கும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் என மீம்ஸ் குவிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
சன் பிக்சர்ஸில் படங்கள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த ஆண்டு ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் ஹீரோவாக டிசி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார் அவரும் மலேசியாவுக்கு சென்றுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 700 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜுன் படத்தை இயக்கி வரும் அட்லியும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் எங்க அண்ணனுக்காக நான் வரேன் என கிளம்பிச் சென்றுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறனை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











