விஜய் பட இயக்குனரின் பாலிவுட் கனவு நனவானது.. ஏப்ரலில் ஷூட்டிங்!

மும்பை: அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Shahrukh Khan 54th birthday celebration at Mannat | ஷாருக்கானின் 54வது பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனர் ஆக பணியாற்றியவர் அட்லி. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தான் இயக்கிய படங்கள் எல்லாவற்றையும் ஹிட் கொடுத்த இயக்குனர் தான் இவர்.

 Atlee next film with sharukh khan confirmed

ராஜா ராணி, தெறி மற்றும் மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லி கடைசியாக இயக்கிய படம் பிகில் விஜய்யுடன் அட்லி இணைந்த மூன்றாவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவியது படமும் ரிலீஸ் ஆனது ஹிட் ஆனது தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் வசூல் செய்யாததை பிகில் படம் செய்தது என கூறப்பட்டது.

பிகில் பட இடைவெளியில் சென்னையில் வைத்து ஷாருக்கானை சந்தித்தார் அட்லி. பிகில் படத்தில் ஷாருக்கான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் எனவும். அட்லி அடுத்து ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் இயக்க போகிறார் என்றும் செய்திகள் கசிந்தன. பிகில் படம் முடிந்ததும் அட்லி அவரை வைத்து இயக்க போகிறார் என்றனர்.

 Atlee next film with sharukh khan confirmed

இதனை நம்பும் வகையில் ஷாருக்கான் பிறந்த நாள் அன்று அட்லி ஷாருக்கானும் இணையும் படத்தின் அறிவிப்பு வரும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏன் அட்லியே கூட காத்து இருந்தார் என்று தான் கூற வேண்டும்.

பிறந்தநாள் அன்று ஷாருக்கான் மற்றும் அட்லி அவரது மனைவி இருக்கும் புகைப்படம் வெளியானதால் எல்லோரும் அடுத்து அட்லி தான் ஷாருக்கானின் இயக்குனர் என்றனர். பின்னர் அட்லியிடம் கதை கேட்ட ஷாருக்கான் படம் இயக்குவது பற்றி எதுவும் கூறவில்லை என்று ஒரு செய்தி உலா வந்தது.

 Atlee next film with sharukh khan confirmed

தற்போது அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படம் வரும் ஏப்ரல் மாதம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X