Atlee on Ajith: "சீக்கிரமே ஹாலிவுட் போவேன்... அஜித் இல்லாம எப்படி..?" அட்லீயின் அடுத்த சிக்ஸர்!
சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.
அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில் விரைவில் ஹாலிவுட் செல்வேன் எனக் கூறியுள்ள அட்லீ, அஜித்துடன் இணைவது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

விரைவில் அஜித்துடன் கூட்டணி: பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கரிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்தவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸிம், ஜெய் ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த அட்லீ, அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்தார். விஜய் - அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன.
இதனால் விஜய்யின் குட்புக்கில் இடம்பிடித்த அட்லீ, தளபதியின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுவரை கோலிவுட்டில் மாஸ் காட்டிய அட்லீ, தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், நாளை (செப்.7) வெளியாகிறது.
ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் அட்லீக்கு நல்ல என்ட்ரி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜவான் படத்துக்குப் பின்னர் அட்லீ எந்த ஹீரோவை இயக்கப் போகிறார் என இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், ஜவான் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, தனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றியும் மனம் திறந்துள்ளார். ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்த அட்லீ, விரைவில் விஜய் - ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என்றார்.

மேலும், கண்டிப்பாக ஹாலிவுட்டில் படம் இயக்க முயற்சிப்பேன் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். முன்னதாக ஜவான் இசை வெளியீட்டு விழாவில், "அட்லீ சீக்கிரம் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும்" என யோகி பாபு கூறியிருந்தார். அதனை பலரும் காமெடியாக ட்ரோல் செய்து வந்த நிலையில், அட்லீயே ஹாலிவுட் செல்வது குறித்து பேசியுள்ளார். அதேபோல், அஜித்துடன் இணைவது குறித்தும் அட்லீ மனம் திறந்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் அனைவருடனும் இணைய வேண்டும் என்பதே தனது ஆசை. அஜித் சாருடன் இணைய சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக அவரையும் இயக்குவேன் என அட்லீ கூறியுள்ளார். விஜய்யின் செல்ல தம்பியான அட்லீ, அஜித்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் ஹைப் கொடுத்துள்ளது. இதனையடுத்து அஜித் - அட்லீ கூட்டணி இணைந்தால் எப்படியிருக்கும் என ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











