பாட்ஷா 2.. கதை ரெடி.. தலைவர் சம்மதத்துக்காக வெயிட்டிங்.. ரஜினி ரசிகர்களை குஷியாக்கிய அட்லி!
Recommended Video
சென்னை: ரஜினியை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டம் இருப்பதாக இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்து அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் சக்கை போடு போடுகிறது.

பிகில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அட்லியிடம் பிகில் 2 எடுக்க திட்டம் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு, "ராயப்பன் யார், அவருடைய பின்னணி என்ன? மைக்கேல் எப்படி பிகில் ஆனார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை வைத்து ஒரு படம் எடுக்கும் யோசனை இருக்கிறது. ஆனால் அதை இப்போதைக்கு எடுக்கவில்லை", என பதிலளித்தார்.
மேலும் பாட்ஷா 2 எடுக்கும் எண்ணம் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு, "நிச்சயமாக ஒரு யோசனை இருக்கிறது. இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களில் பாட்ஷா தான் சிறந்த டெம்ப்ளேட். ஒரு கதை தயாராக இருக்கிறது. தலைவர் (ரஜினி) சரியென்றால் ஷூட்டிங் போக வேண்டியது தான்" என அட்லி பதிலளித்தார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான இப்படம் மெகா ஹிட்டானது. ரஜினியின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக பாட்ஷா அமைந்தது.
ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சிவா இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளது. இது அவரது 168வது படமாகும். இந்த படங்களை முடித்துவிட்டு, மேலும் இரண்டு படங்கள் நடிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் அட்லியின் இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











