Just In
- 26 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 2 hrs ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சத்தமே இல்லாமல் ரைஸ் ஆகும் அந்த பிரபல நடிகர்.. அட்லியின் பார்வை இப்போ அவர் மேல தானாம்?
சென்னை: இயக்குநர் அட்லியின் அடுத்த தமிழ் படத்தில் இந்த பிரபல நடிகர் தான் நடிக்கப் போகிறார் என்ற அசத்தலான தகவல் கசிந்திருக்கிறது.
ராஜா ராணி படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியாவை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லி.
தளபதி விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என பயணித்த அவர், அடுத்ததாக பாலிவுட்டா? கோலிவுட்டா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

சொதப்பும் ஷாருக்கான்
இயக்குநர் அட்லியின் திரைக்கதை பிடித்துப் போனாலும், அவரை வெயிட்டிங் லிஸ்டிலேயே நடிகர் ஷாருக்கான வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் தான் ஷாருக்கான் அடுத்ததாக நடிக்கப் போவதாகவும், அட்லியின் பாலிவுட் என்ட்ரி தாமதம் ஆகலாம் என்றும் கருதப்படுகிறது.

மீண்டும் தமிழ்
பாலிவுட் பயணம் தாமதமாகும் நிலை உருவாகி வரும் நிலையில், தமிழில் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் இயக்குநர் அட்லி. ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகாரம் படத்தை வாங்கி வெளியிட திட்டமிட்டுள்ளார். தியேட்டர்கள் திறக்கப்படாததால் OTT தளத்தில் அந்த படம் ரிலீஸ் ஆகப் போகிறது.

விஜய் இல்லை
இந்நிலையில், அடுத்ததாக உருவாக உள்ள அட்லியின் படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக ஜெயம் ரவி நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அந்த படத்தை அட்லியின் உதவி இயக்குநர் இயக்க உள்ளார். அட்லி அந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்ற தகவல் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்கே.

சத்தமே இல்லாமல் சாதனை
தெலுங்கு படங்களை ரீமேக் செய்து ஹிட் கொடுத்து வந்த நடிகர் ஜெயம் ரவி, தனி ஒருவன் படத்திற்கு பிறகு, சத்தமே இல்லாமல் கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான கோமாளி படமும் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய படங்கள்
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள பூமி படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் லீடு ஹீரோவாக ஜெயம் ரவி நடித்து வருகிறார். கோலிவுட்டில் ஜெயம் ரவியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.