twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்றாம் பிறை டு அந்த 7 நாட்கள்.. வைரலாகும் புதிய ஃபர்ஸ்ட் லுக்.. ”வேற லெவல்னா” என பாராட்டிய அட்லி!

    |

    சென்னை: பிகில் ஃபர்ஸ்ட் லுக், மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் என புதிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகின்றன.

    ஆனால், அந்த கால திரைப்படங்களுக்கெல்லாம் இதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் கலாசாரம் ஏதும் இருந்ததில்லை.

    அப்படி அந்த படங்களுக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டால் எப்படி இருக்கும் என டிசைனர் கோபி பிரசன்னா வெளியிட்டு வரும் ஃபர்ஸ்ட் லுக் படைப்புகள் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

    வெறும் சட்டையுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த நடிகை...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிவெறும் சட்டையுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த நடிகை...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

    இவர் தான் டாப்

    இவர் தான் டாப்

    தமிழ் சினிமாவில் தற்போது போஸ்டர் டிசைனிங் என்றாலே கோபி பிரசன்னாவின் பெயர் தான் அனைவரது முதல் பரிந்துரையாக இருக்கிறது. அந்தளவுக்கு நேர்த்தியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வடிவமைத்து அசத்தி வருகிறார். கடந்த 7 வருடத்தில் டாப் நடிகர்களின் 100 பட போஸ்டர்கள் இவரது கலை வண்ணத்தில் உருவாகி இருக்கிறது.

    விஜய் படங்களுக்கு

    விஜய் படங்களுக்கு

    தளபதி விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என கடந்த 7 ஆண்டுகளில் ரிலீசான 6 படங்களுக்கும் அத்தனை போஸ்டர்களையும் கோபி பிரசன்னா தான் டிசைன் செய்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் சூரரைப் போற்று, சூப்பர் டீலக்ஸ், கேம் ஓவர் என எக்கச்சக்க சூப்பர் போஸ்டர் டிசைன் ஒர்க்குக்கும் இவர் தான் சொந்தக்காரர்.

    எவர்க்ரீன் படங்களுக்கு புதிய போஸ்டர்

    எவர்க்ரீன் படங்களுக்கு புதிய போஸ்டர்

    போஸ்டர் டிசைனில் ஏதாவது ஒரு புதுமையை படைக்க வேண்டும் என நினைத்த டிசைனர் கோபி பிரான்னா தற்போது எவர்க்ரீன் படங்களுக்கு புதிய போஸ்டர் டிசைன்களை செய்து வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, மெளன ராகம், அந்த 7 நாட்கள் என தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி வருகிறது.

    மூன்றாம் பிறை ஃபர்ஸ்ட் லுக்

    மூன்றாம் பிறை ஃபர்ஸ்ட் லுக்

    பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்திற்கு அப்போது இப்படி ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு அலையை உருவாக்கி இருக்கிறது கோபி பிரசன்னாவின் கைவண்ணத்தில் உருவான இந்த மூன்றாம் பிறை போஸ்டர். விஜி.. விஜி. விஜி.. என கமல் அழைப்பதும்.. சீனு.. சீனு.. சீனு என ஸ்ரீதேவி கூப்பிடுவதையும் போஸ்டர் டிசைனில் வடிவமைத்துள்ளார்.

    சிந்து பைரவி போஸ்டர்

    சிந்து பைரவி போஸ்டர்

    மொத்தம் 10 ரெட்ரோ படங்களின் போஸ்டர்களை உருவாக்கப் போவதாக அறிவித்து நாள்தோறும் ஒவ்வொரு போஸ்டர்களாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் டிசைனர் கோபி பிரசன்னா. பாலசந்தர் இயக்கத்தில் சுஹாசினி, சிவகுமார் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான சிந்து பைரவியின் லேட்டஸ்ட் போஸ்டர் வேற லெவல் என்றே சொல்லலாம்.

    அந்த நாய் வால் ஜடை

    அந்த நாய் வால் ஜடை

    சுஹாசினி, மோகன் நடிப்பில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் 1985ம் ஆண்டு ரிலீசான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் போஸ்டரும் ரசிகர்களை சட்டென அந்த படத்தை பற்றிய நினைவுகளில் மூழ்கடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும், சுஹாசினியின் அந்த நாய் வால் ஜடை கதையின் கருவையே விளக்கி விட்டது.

    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

    ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

    எ பிலிம் பை பாரதிராஜா என 1977ம் ஆண்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் போஸ்டரையும் பக்காவாக உருவாக்கி உள்ளார் கோபி பிரசன்னா. "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" பாடல் வரிகளை மையப்படுத்தி நடிகர் கமல், ஆடு மற்றும் கோழி ஒன்று இருக்கும் படி இந்த போஸ்டர் அமைந்திருக்கிறது.

    கெட்டப்பையன் சார்

    கெட்டப்பையன் சார்

    இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 1978ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முள்ளும் மலரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வைரலாகி வருகிறது. "ரெண்டு கையும், ரெண்டு காலும் போனா கூட பொழச்சிக்குவேன்.. கெட்டப்பையன் சார் அவன்" என ரஜினி பேசும் வசனத்தையும் இந்த போஸ்டரில் இணைத்துள்ளார்.

    சோகத்தின் நிழல்

    சோகத்தின் நிழல்

    சோகத்தின் நிழலாக நடிகை ரேவதி தனியாக அமர்ந்திருக்கும் மெளன ராகம் பட போஸ்டர் எல்லாம் வேற லெவல் டிசைன் என பலரும் கோபி பிரசன்னாவை பாராட்டி வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி, கார்த்தி நடிப்பில் 1986ம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அட்லி பாராட்டு

    அட்லி பாராட்டு

    7வது போஸ்டராக இயக்குநர் பாக்யராஜ் இயக்கி நடித்து 1981ம் ஆண்டு வெளியான "அந்த 7 நாட்கள்" படத்தின் அட்டகாசமான போஸ்டரை இன்று கோபி பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரை பார்த்த இயக்குநர் அட்லி, "வேற லெவல்னா நீங்க.. வேற லெவல்" என மனதார பாராட்டியுள்ளார். இன்னும் சில போஸ்டருக்கு வெயிட்டிங்.

    English summary
    Atlee praised Gopi Prasanna retro movie first look design work!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X