சூப்பர் டீசர் நண்பா.. ஹீரோவை புகழ்ந்த பிகில் இயக்குநர்!
சிவகார்த்திகேயனின் ஹீரோ டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியான நிலையில், டீசரை பார்த்த பிகில் பட இயக்குநர் அட்லி, சூப்பர் டீசர் நண்பா என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
சென்னை: இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஹீரோ டீசரை பார்த்த பிகில் பட இயக்குநர் அட்லி, சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஹீரோவா?
சிவகார்த்திகேயனின் ஹீரோ டீசர் இன்று காலை வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சிவகார்த்திகேயனை ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்தன. ஆனால், வெளியாகியுள்ள டீசரில், கல்வியில் நடைபெறும் ஊழலை தடுக்க ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறுகிறார் என்பதையே காட்டியுள்ளனர்.

பாலிவுட் நடிகர்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ள ஹீரோ டீசரில் பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இரும்புத்திரையில் வில்லனாக நடித்திருந்த நடிகர் அர்ஜுன் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனின் குருவாக நடித்துள்ளார். இந்த டீசரில் இறுதி வரை தெளிவாக சிவகார்த்திகேயனின் முகத்தை காட்டாமல் அழகாக கட் செய்துள்ளனர்.

நண்பனுக்காக
பிகில் படத்தின் ரிலீஸ் பிசியில் இருக்கும் இயக்குநர் அட்லி, தனது நண்பன் சிவகார்த்திகேயனுக்காக, ஹீரோ டீசரை பார்த்த உடனே, தனது ட்விட்டர் பக்கத்தில் "சூப்பர் டீசர் நண்பா சிவகார்த்திகேயன்" என பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினரான ஒளிப்பதிவாளர் ஜியார்ஜ், எடிட்டர் ரூபன், இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸின் ராஜேஷ் உள்ளிட்டவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை அட்லி கூறியுள்ளார்.
மகிழ்ச்சி
ஹீரோ படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எதிர்பார்த்ததை விட டீசர் அருமையாக இருக்கிறது என்றும், டிசம்பர் 20ம் தேதி படத்தின் ரிலீஸை வேற லெவலில் கொண்டாடவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











