Atlee Son Birthday: வாரிசுக்கு பிறந்த நாள்.. ஃபேமிலி போட்டோவை வெளியிட்ட அட்லீ தம்பதியர்!

மும்பை: அட்லீ மற்றும் அவரது மொத்த குடும்பமும் இப்போது பாலிவுட் பிரபலங்களாக மாறிவிட்டனர். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், பாலிவுட்டில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள், ஸ்டார் வீட்டு விஷேசங்கள், அம்பானி போன்ற பணக்காரர்களின் வீட்டு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்வதே தலைப்புச் செய்திகளாக மாறுகின்றது. இவர் தனது அடுத்த படத்தில் சல்மான் கானை வைத்து இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. இப்படி இருக்கும்போது, தங்களது மகனின் இரண்டாவது பிறந்த நாளில் எடுத்த புகைப்படத்தை தம்பதியர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதனைப் பார்த்த இணையவாசிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

atlee priya atlee

அட்லீ, தமிழ் சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். தான் இயக்கிய முகப்புத்தகம் என்ற குறும்படத்தில் தொடங்கி, கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான, ஜவான் படம் வரை அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். தான் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அவர் பேசும்போது, என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுகின்றார். நான் அவருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கவேண்டும். இதுமட்டும் இல்லாமல், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஒரு திருப்தியான உணர்வினைக் கொடுக்கவேண்டும் என்பதில்தான் எனது கவனம் உள்ளது எனத் தெரிவித்தார். இதனாலேயே இவருக்கு படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை. மேலும் இவரை இயக்குநர்களில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் மன்னன் எனக் கூறுகின்றனர்.

atlee priya atlee

அட்லீ: இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது திரைக்கதை ஏற்கனவே வெளியான மௌனராகம் படத்தின் திரைக்கதையைப் போல உள்ளது என விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் இவர் கதை சொல்லும் விதமும் காட்சி அமைப்புகளும் முற்றிலும் வேறு என்பதால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று, பெரும் வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் இவர் விஜய்யை வைத்து இயக்கிய படங்களான தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களும் பெரும் வெற்றிப் படங்களாக மாறியதால், தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மாபெரும் இயக்குநராக மாறினார்.

atlee priya atlee

ஷாரூக்: பிகில் படத்தின் வெற்றியைப் பார்த்து, ஷாரூக்கான் அட்லீயை அழைக்க, இருவரும் இணைந்து ஜவான் படத்தில் பணியாற்றினர். இந்தப் படம் வசூலில் தியேட்டரில் மட்டும் ரூபாய் 1000 கோடிகளை அள்ளியது. இதனால், பாலிவுட்டில் ஒரே படத்தில் மிகப்பெரிய இயக்குநராக மாறினார். இதனால் பல ஸ்டார்கள் இவரது படத்தில் நடிக்க அவரிடம் பேசிக்கொண்டு உள்ளனர். ஜவான் படத்தின் படப்பிடிப்பின்போது அட்லீ - ப்ரியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டார்கள். இந்தப் பெயர் ஷாரூக் கானின் தந்தைப் பெயர்.

atlee priya atlee

மீர்: மீர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி பிறந்தார். நேற்று மீரின் இரண்டாவது பிறந்த நாளை அட்லீ தம்பதியர் கொண்டாடினர். இது தொடர்பாக அட்லீ தம்பதியர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் ஆங்கிலத்தில், "Happy happy two our beautiful little world 🌟✨🩵" எனவும் கேப்ஷன் இட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அட்லீயின் மகனுக்கு பிறந்த நாள் எனத் தெரிந்து கொண்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

atlee priya atlee

More from Filmibeat

Read more about: atlee priya atlee அட்லீ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X