“பிகிலு”.. விஜய் ‘ராயப்பன்’ ஆனதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா அட்லி சார்.. பக்கா ஸ்கெட்ச்!

பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டரில் விஜய் நடித்தது பற்றி அட்லி பேசியுள்ளார்.

Recommended Video

விஜய் தானே பாடிய பாடல் !.. திடீரென வைரலாகும் வீடியோ!

சென்னை : பிகில் படத்தில் அனைவரையும் கவர்ந்த ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்தது எப்படி என்பது குறித்து அப்பட இயக்குநரான அட்லி பேசியுள்ளார்.

தீபாவளியையொட்டி கடந்த 25ம் தேதி ரிலீசானது விஜய் நடித்த பிகில் படம். தெறி, மெர்சலைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்திருந்தார். எனவே படம் பற்றி ஆரம்பம் முதலே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்வது போல், பிகில் படமும் விஜய் - அட்லி கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளது.

இரண்டாவது வாரமாக பிகில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெண்கள் கால்பந்து பற்றிய கதைக்களத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பிகில் ராயப்பன்

பிகில் ராயப்பன்

இந்நிலையில் பிகில் படம் பற்றி அட்லி அளித்த பேட்டி ஒன்றில், விஜய் நடித்த அப்பா கதாபாத்திரமான ராயப்பன் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், "கதைப்படி விஜய்யின் மைக்கேல் கதாபாத்திரத்திற்கு அப்பா கனமான கதாபாத்திரம். எனவே அதில் மூத்த நடிகர் யாரையாவது தான் நடிக்க வைக்க வேண்டும் என முதலில் நினைத்தோம்.

யோசனை

யோசனை

ஆனால் அப்படி நினைத்ததும் எனக்கு தலைவா, ஜில்லா போன்ற படங்கள் தான் ஞாபகம் வந்தது. எனவே, பேசாமல் இதில் அந்த அப்பா கதாபாத்திரத்தையும் விஜய்யையே பண்ண வைத்தால் என்ன என்ற யோசனை வந்தது.

செட் ஆகாது

செட் ஆகாது

இதனை என் உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் இளமையான விஜய் எப்படி வயதான அப்பா கதாபாத்திரத்திற்கு செட் ஆவார் என அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இந்த ஐடியா செட்டே ஆகாது என்பதே அவர்களது வாதம்.

விஜய் சம்மதம்

விஜய் சம்மதம்

பிறகு இது பற்றி நான் விஜய்யிடம் பேசினேன். அவர், ‘ராயப்பன் கேரக்டரில் யார் நடிக்கிறார்கள்?' என என்னிடம் கேட்டார். அதனையும் நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என நான் கூறினேன். சற்று யோசித்தவர், ‘ஆமாம்ல நல்லாத்தான் இருக்கும்' என ஓகே சொல்லி விட்டார்.

திருப்தி

திருப்தி

இரண்டே நாளில் மேக்கப் டெஸ்ட் வைத்துப் பார்த்தோம். சரியாக கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அனைவருக்கும் திருப்தியாக இருந்தது. அதனால் அவரே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து விட்டார்.

எங்கள் கெமிஸ்ட்ரி

எங்கள் கெமிஸ்ட்ரி

அப்படித்தான் ராயப்பன் கதாபாத்திரத்திற்குள்ளும் விஜய் வந்தார். பொதுவாகவே எனக்கும் விஜய்க்கும் இடையே நல்ல ஒரு கெமிஸ்ட்ரி உண்டு. அது இப்படத்திலும் வெளிப்பட்டு விட்டது" என அட்லி தெரிவித்துள்ளார்.

பிகில் 2

பிகில் 2

பிகில் படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பது ராயப்பன் கதாபாத்திரம் தான். பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் தனக்கிருப்பதாக அட்லி கூறியுள்ளார். அதில், ராயப்பன் எப்படி வளர்ந்தார், அவரது பின்னணி என்ன, மைக்கேல் பிகிலாக எப்படி மாறினார் என்பது பற்றி விளக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X