என் அலையவ.. கடல் அவ.. அல்லு அர்ஜுன் படத்துக்கு நடுவே.. மனைவியுடன் செம ரொமான்ஸ் செய்யும் அட்லி!

சென்னை: இயக்குநர் அட்லி நடிகை பிரியா அட்லியை திருமணம் செய்துக் கொண்டு அழகான ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். தமிழ் சினிமாவில் இயக்குஅர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, நயன்தாராவின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

நண்பன் படத்தில் விஜய்யுடன் பணியாற்றிய நிலையில், அவரை வைத்து தெறி படத்தை எடுத்த அட்லி அப்படியே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக ஆனது மட்டுமின்றி தற்போது இந்தியாவிலேயே முன்னணி இயக்குநர்களில் டாப் 5 இடத்துக்குள் உள்ளார்.

Atlee romances with his wife Priya Atlee and shares a cute video with Dude song
Photo Credit:

தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் 1100 கோடி வசூல் செய்த நிலையில், அட்லி அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படத்துக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

மனைவியுடன் ரொமான்ஸ்: என்ன தான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி தனது மனைவி பிரியாவுடனும் தனது குழந்தையுடனும் நேரத்தை செலவிடுவதையும் மறக்காமல் செய்து வருகிறார் அட்லி. கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பிரியா சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். பிரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அட்லி அதே காதலுடன் தற்போது வெளியிட்ட வீடியோ ரசிகர்களை லைக் செய்ய வைத்து வருகிறது.

சாய் அபயங்கருக்கு பூஸ்ட் அப்: அதே நேரத்தில் தனது படத்தின் அடுத்த இசையமைப்பாளரான சாய் அபயங்கரை பூஸ்ட் அப் செய்யும் விதமாக பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தில் இடம்பெற்ற "ஊறும் பிளட்: பாட்ல வரிகளை பின்னணி இசையாக போட்டு தனது மனைவி பிரியாவுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்ற காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார் அட்லி.

அல்லு அர்ஜுன் படத்துக்கு வெயிட்டிங்: புஷ்பா 2 படத்துக்குப் பிறகு பிரபாஸை விட அல்லு அர்ஜுன் ரேஞ்ச் இந்தியளவில் உச்சத்துக்கு சென்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படம் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் நிலையில், அந்த படம் குறித்த அப்டேட்களையும் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் என முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், அட்லியின் அடுத்த படம் பான் வேர்ல்ட் வெற்றியடையும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X