ஷாருக்கான் அட்லி படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா? 4வது முறையாக ஜோடி சேரும் அசத்தல் கூட்டணி!

சென்னை: இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் நாயகி யார் என்கிற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, தளபதி விஜய்யுடன் இணைந்து தொடர்ந்து மூன்று பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார்.

ஜீரோ படத்தில் கடைசியாக நடித்துள்ள ஷாருக்கான் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

இயக்குநர் அட்லியின் இயக்கத்தை கண்டு பாராட்டிய ஷாருக்கான், அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஷாருக்கானுக்காக அட்லி சொன்ன கதையும் அவருக்கு பிடித்துப் போக, விரைவிலே அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே லீக்கான SANKI எனும் டைட்டில் தான் கன்ஃபார்ம் ஆகி உள்ளதாம்.

ராஜ்குமார் ஹிரானி

ராஜ்குமார் ஹிரானி

அட்லி படத்திற்கு முன்னதாக 3 இடியட்ஸ், முன்னா பாய் எம்.பி.பி.எஸ்., சஞ்சு படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது பாலிவுட்டில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக முதலில் அட்லி படத்தை ஓகே பண்ணி உள்ளாராம் ஷாருக்கான்.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோனே தான் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் லீக்காகி உள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அக்டோபரில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

4வது முறை

4வது முறை

ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட்டில் என்ட்ரியான பெங்களூர் நடிகை தீபிகா படுகோனே, தற்போது பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2013ல் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா நடித்துள்ளார்.

பிரபாஸ் படத்தில்

பிரபாஸ் படத்தில்

மேலும், நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படத்திலும் நடிகை தீபிகா படுகோனே கமீட் ஆகி உள்ளார். இதனால், அட்லி, ஷாருக்கான் படத்திற்கும் அந்த படத்திற்கும் அவர் எப்படி கால் ஷீட் ஒதுக்குவார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

காத்திருப்பு

காத்திருப்பு

தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கிறார். ஷாருக்கானும் நல்ல ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில், அட்லி உடன் இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X