Just In
- 11 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 11 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 11 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 11 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
உலகை நடுங்க வைக்கும் கொரோனா மரணங்கள்.. அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பிரேசிலில் விபரீதம்
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்!
சென்னை: அட்லி தயாரிப்பில் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டுகிறது.
கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், ஹீரோவாக நடித்துள்ள படம் தான் அந்தகாரம்.
மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளதால், தற்போது ரிலீசாகி உள்ள இந்த டிரைலரில் மாஸ்டர் ரெஃபரன்ஸை தாராளமாக பயன்படுத்தியுள்ளனர்.
கையில பீப்பி.. சேலையில செம க்யூட்.. இவ்ளோ அழகான பூம் பூம் மாட்டுக்காரியை பார்த்து இருக்கமாட்டீங்க!

கைதி வில்லன்
பெருமான் எனும் Independent படத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளிய அர்ஜுன் தாஸ், அட்லி தயாரிப்பில் அந்தகாரம் படத்தில் நடிக்க கமீட் ஆனார். அர்ஜுன் தாஸின் வித்தியாசமான பேஸ் வாய்ஸ் அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை பெற்றுத் தந்தது.

துருவ நட்சத்திரம்
ரேடியோ ஒன் 94.3FMல் ஆர்.ஜே.,வாக பணிபுரிந்து வந்த அர்ஜுன் தாஸின் தனித்துவமான குரலை கண்டு மயங்கிய இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், சியான் விக்ரமை வைத்து தான் இயக்கி வந்த துருவ நட்சத்திரம் படத்தின் டீசரில் டார்க் மேனுக்கான குரலுக்கு டப்பிங் பேச வைத்திருப்பார்.

மாஸ்டர் படத்திலும்
லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், மாஸ்டர் படத்திலும் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகர் டோவினோ தாமஸை களமிறக்க லோகேஷ் நினைத்திருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக டோவினோ மாஸ்டர் படத்தில் இணையாததால், அர்ஜுன் தாஸுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அட்லி வெளியீடு
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த அட்லி, ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குநராக வளர்ந்துள்ளார். ஏ ஃபார் ஆப்பிள் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இயக்குநர் அட்லி, அந்தகாரம் படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்துள்ளார்.
டிரைலர் ரிலீஸ்
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகாரம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது. கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸை வேற ஒரு வெர்ஷனில் இந்த அந்தகாரம் படத்தில் ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள். விக்னராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் லாக் டவுன் முடிந்ததும் வெளியாகும் என தெரிகிறது.

மாஸ்டர் ரெஃபரன்ஸ்
மாஸ்டர் படத்தின் டிரைலராவது தமிழ் புத்தாண்டு தினமான இன்று விடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, மாஸ்டர் படத்தின் ரெஃபரன்ஸ் உடன் இந்த அந்தகாரம் டிரைலர் வெளியாகி இருக்கிறது. கூண்டுக்குள் இருக்கும் புலி கதையை சொல்லும் படியாக ஆரம்பிக்கும் டிரைலரில் இரண்டு இடங்களில் மாஸ்டர் என்ற வசனம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.