அந்தகாரம் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம்...அட்லியின் முதல் தயாரிப்பே வெற்றி!

சென்னை : திரையரங்குகளில் வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அந்தகாரம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது.

அட்லி இதுவரை பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டுமே பலராலும் அறியப்பட்ட நிலையில் இப்பொழுது தயாரிப்பாளராகவும் அந்தகாரம் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமாக காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டி இருந்த அந்தகாரம் திரைப்படம் பெரும்பான்மையான மக்களை ரசிக்க வைத்து வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது இந்த படக்குழு சக்சஸ் மீட்டை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிரட்டலான குரல்

மிரட்டலான குரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் அதிரடி நடிப்பால் பார்க்கும் அனைவரையும் மிரட்டும் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.

மாஸ்டர் திரைப்படத்திலும்

மாஸ்டர் திரைப்படத்திலும்

இதைத்தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அட்லி முதன் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கி தயாரித்து இருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் மிரட்டியது.

ஓடிடி தளத்தில் வெளியானது

ஓடிடி தளத்தில் வெளியானது

காட்சிக்கு காட்சி த்ரில்லர், பயமுறுத்தும் ஹாரர் என பார்க்கும் அனைவரின் இதயங்களையும் படபடக்க வைக்கும் அந்தகாரம் திரைப்படம் திரையில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷான் என்ற இரண்டு தனித்தன்மை மிக்க நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததோடு பல பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.

சிறந்த தயாரிப்பாளர்

சிறந்த தயாரிப்பாளர்

இந்நிலையில் அட்லி அந்தகாரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டி சக்சஸ் மீட் நடத்தி கொண்டாடிய புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து அவை வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லியாக பலராலும் கவரப்பட்ட இவர் இப்பொழுது தரமான திரைப்படங்களை தயாரித்து சிறந்த தயாரிப்பாளர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X