அட்லியின் அந்தகாரம்.. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறதா.. ரசிகர்கள் அதிர்ச்சி !

சென்னை: தமிழில் முன்னணி இயக்குனர் அட்லியின் அந்தகாரம் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது தியேட்டரில் வெளியாகாமல் பல்வேறு சிக்கல்களை தாண்டி நேரடியாக OTT ல் வெளியானது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து தமிழில் முன்னணி இயக்குனரின் படத்தையும் நேரடியாக OTT ல் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி இப்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அவர் தயாரித்த படத்தின் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி. ஆர்யா, ஜெய், நயன்தாரா, சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தனது முதல் படமான "ராஜா ராணி"யை இயக்கியிருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையவே தனது அடுத்த படமான "தெறி"யை நடிகர் விஜயை வைத்து இயக்கி அதிலும் பிளாக்பஸ்டர் கொடுத்தார்.

விஜய் ரசிகர்

விஜய் ரசிகர்

தெறியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களையும் நடிகர் விஜயை வைத்து மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்று அனைத்து மக்களையும் சென்றடைந்தது. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இவரின் பெயர் இடம் பெற்றன. மேலும் இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார் அதை அவரே பல மேடைகளில் கூறி பூரிப்படைந்து இருக்கிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இப்படி வெற்றிக்கு மேல் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. இவரின் படங்களில் வரும் பல காட்சிகள் வேறு படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை என பலர் இவரை கலாய்ப்பதும் உண்டு, அது சிலசமயம் உண்மையும் கூட. இந்த சர்ச்சை இன்று நேற்றல்ல இவரது முதல் படத்தில் இருந்தே பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் நடிகர் ஷாருக்கானுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அடுத்த படம் ஷாருக்கானுடன் தான் என சில பேச்சுக்களும் அடிபட்டன. அது இன்றளவும் பேச்சுவார்த்தையில் தான் உள்ளது அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இந்நிலையில் இவர் அடுத்த படத்தை ஒரு பெரிய நடிகரை வைத்து இயக்குவார் என எதிர் பார்க்கப்பட்டு வந்த நிலையில். இவர் தற்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளார். கைதி படத்தில் தனது அசுர நடிப்பை வெளிக்காட்டிய அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் ஆகியோரின் நடிப்பில் "அந்தகாரம்" என்ற படத்தை இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஏ பார் ஆப்பிள் புரோடக்சன்‘ மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ், O2 பிக்சர்ஸ் போன்றவற்றுடன் இணைந்து தயாரித்து வருகிறார். அதன் முதல் பார்வை மற்றும் முன்னோட்டம் சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது.

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் வெளியாகாமல் தியேட்டருக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் வேறு வழியில்லாமல் பல தடைகளையும் பல பிரச்சனைகளையும் தாண்டி தமிழில் முதன்முதலாக பொன்மகள் வந்தாள் OTT ல் வெளியிடப்பட்டது. அதேபோல் தெலுங்கில் ரன் என்ற படமும் OTT ல் வெளியானது.

Recommended Video

'Surya' தைரிய லட்சுமியோட புருஷன் • PonMagal Vandhal •OTT Controversy | Penguin
நெட்பிளிக்ஸில்

நெட்பிளிக்ஸில்

அட்லியின் முதல் தயாரிப்பு படமான அந்தகாரம் படமும் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனிதன் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தன்னை புதுப்பித்துக்கொண்டே வருவது போல. எப்படி டென்ட் கொட்டாய்களிலிருந்து திரையரங்குகள் வந்ததோ அதே போல் இப்போது திரைப்படங்களும் டிஜிட்டலில் வெளியாகிறது என பலர் பேசி வருகின்றனர். இன்னும் சிலர் டிஜிட்டலில் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளுக்கு ஒன்றும் பாதிப்பில்லை, திரையரங்குகளில் வந்து படம் பார்ப்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X