மனைவி பிரியாவின் பிறந்தநாள்.. அட்லி போட்ட உருக்கமான வாழ்த்து டிவீட்.. நெட்டிசன்கள் செம கலாய்!

இயக்குனர் அட்லி டிவிட்டர் மூலம் தனது மனைவி பிரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Atlee Priya Wedding Anniversary: அட்லீ பிரியாவின் ஐந்தாம் ஆண்டு திருமண நாள்

சென்னை: இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவிற்கு கவித்துவமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லி. நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். அந்த மூன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன.

Atlees birthday wish to Priya is a highlight romance

அட்லி அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. பல முன்னணி நடிகர்கள், அட்லியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லி நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

பிரியாவுக்கு இயக்குனர் அட்லி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நாம் சந்தித்தோம். நண்பர்களானோம். திருமணம் செய்துகொண்டோம். இப்போது நீ என்னுடைய மகள். எல்லாமும் நீ தான். பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா. என்னென்றும் காதலுடன், அட்லி", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்லியின் இந்த கவித்துவமான வாழ்த்தை தொடர்ந்து, ரசிகர்களும் பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சில குறும்புக்கார நெட்டிசன்கள், "இத நீங்க வீட்லயே சொல்லியிருக்கலாமே", என கிண்டல் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X