உள்ளாடையுடன்.. ஹீரோயின்லாம் இல்லை.. நம்ம அட்லீ தான்.. கொரோனா விழிப்புணர்வு சொல்லியிருக்காப்ல!
சென்னை: இயக்குநர் அட்லி, உள் பனியன் அணிந்தபடி வீட்டில் ஹாயாக தனது மனைவி மற்றும் செல்ல நாய்க்குட்டி உடன் இருக்கும் செல்ஃபியை போட்டு, கொரோனா விழிப்புணர்வு சொல்லியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக, பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, மக்கள் ஊரடங்கு, இன்று காலை முதல் ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பிரபலங்கள் தப்புத் தப்பாக உளறினாலும், பொதுமக்கள், இந்த விஷயத்தில் அறிவாளிகளாகவும், தெளிவான விழிப்புணர்வுடனும் தான் இருக்கின்றனர்.
அட்லி செல்ஃபி
தளபதி விஜய்யின் பிகில் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் உடன் சேர்ந்து படம் பண்ண உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், எல்லாரும் வீட்டில் சேஃபா இருங்க என பதிவிட்டுள்ளார்.
உள்ளாடை
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி உள்ளார். கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவில், அட்லி, உள் பனியன் உடன் போஸ் கொடுத்துள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கருப்பு
இயக்குநர் அட்லி, கருப்பு நிறத்தில் இருக்கிறார், அவர் மனைவி பிரியா வெள்ளையாக பளிச்சென்று இருக்கிறார், என தொடர்ந்து பல முறை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். இப்படி ஒரு மனிதனை நிறத்தை வைத்து விமர்சிப்பதும், மோசமாக கமெண்ட் செய்வதும், சரியான முறையல்ல என்பதை நெட்டிசன்கள் எப்போது தான் உணர போகின்றார்களோ..
ராயப்பன் ப்ரீக்வல்
இயக்குநர் அட்லி, தனது மனைவி பிரியாவுடன் செல்ஃபி போட்டோவை போட்டு, வீட்டிலேயே பத்திரமாக இருங்கள், யாரும் வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தளபதி ரசிகர்கள், உடனடியாக அட்டன்டென்ஸ் போட்டு, ராயப்பன் ப்ரீக்வல் செஞ்சுடலாமா என கேட்டு வருகின்றனர். மாஸ்டரே எப்போ வருமுன்னு முதல்ல தெரியலயே பாஸ்!
செம சான்ஸ்
படப்பிடிப்புகள் இல்லாமல், எல்லாரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், நிறைய ஹாலிவுட் படங்களை பார்த்து, நல்ல நல்ல காட்சிகளை காப்பி அடிக்க, உங்களுக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க அட்லி என சில ஹேட்டர்கள் கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











