அட்லியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.. யாரு சொல்லியிருக்காங்க பாருங்க!

மும்பை : பாலிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக்கான் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது ஜவான் படம்.

இந்தப்படத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ளார். இயக்குநர் அட்லி படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் நேற்றைய தினம் படத்தின் டைட்டில் வெளியானது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என்று பாலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். 3 ஆண்டுகளுக்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகி வருகிறது ஜவான் படம். இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். கடந்த 2020லேயே இந்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், இடையில் சில பிரச்சினைகளால் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது.

சொந்த பிரச்சினைகள்

சொந்த பிரச்சினைகள்

தன்னுடைய மகன் ஆர்யனின் பிரச்சினையால் மனமடைந்து இருந்தார் ஷாருக். இதையடுத்து ஜவான் படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில், தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்றைய தினம் வெளியானது.

நயன்தாரா அறிமுகம்

நயன்தாரா அறிமுகம்

இந்தப் படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. அவர் காவல்துறை அதிகாரியாக படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. ஷாருக் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஒரு கேரக்டரில் கேங்ஸ்டராகவும் மற்றொன்றில் ரா விசாரணை அதிகாரியாகவும் அவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான டீசர்

மிரட்டலான டீசர்

படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அவரது பின்னணியில் படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இதில் ஷாருக் மிரட்டலாக காணப்படுகிறார். முகத்தில் கோணியை சுற்றியபடி அவர் இந்த டீசரில் காணப்படுகிறார். மேலும் ரெடி என்று மிரட்டலாக கேட்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மொழிகளில் வெளியீடு

5 மொழிகளில் வெளியீடு

படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாகவும் தற்போதே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய படம் ரிலீசாக இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், அட்லி போதிய நேரம் எடுத்துக் கொண்டு படத்தை சிறப்பாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நனவான கனவு

நனவான கனவு

இதனிடையே, இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் இசையமைப்பதன்மூலம் தன்னுடைய கனவு நனவாகியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டீசரையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

அட்லி குறித்து பெருமை

அட்லி குறித்து பெருமை

பாலிவுட் பாட்ஷாவுடன் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இயக்குநர் அட்லி குறித்து தனக்கு மிகவும் பெருமையாக உள்ளதாகவும் இந்தப் படம் தங்களுக்கு மிகவும் ஸ்பெஷலாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஷாருக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X