அவசரமாக நடக்கிறது ஸ்கிரிப்ட் வேலை... அட்லீ, ஷாருக்கான் இணையும் படத்தை தயாரிக்கிறார் கரண் ஜோஹர்?
சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், ஆனந்த். எல்.ராய் இயக்கியிருந்த ஸீரோ என்ற படத்தில்
நடித்திருந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை ஷாருக்.

அட்லி, வெற்றிமாறன்
நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். நம்மூர்
அட்லியிடமும் கதை கேட்டிருந்தார். இதற்கிடையே, தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய ஷாருக், சில இயக்குனர்களை மும்பைக்கு அழைத்திருந்தார். அதில் அட்லீயும் வெற்றிமாறனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாருக்கான் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆக்ஷன் காமெடி
ஆனால், மவுனம் காத்தார், 'பாலிவுட் பாட்ஷா'. இந்நிலையில் பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார் என்றும் ஆக்ஷன் காமெடி படமான இதன் ஷூட்டிங், தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.

ஆஷிக் அபு
பிறகு மலையாள இயக்குனர் ஆஷிக் அபு, ஷாருக் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.
இவர், டாடி கூல், சால்ட் அண்ட் பெப்பர், 22 ஃபீமேல் கோட்டயம் உட்பட சில மலையாளப் படங்களை இயக்கியவர். இதற்கிடையே ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் அவர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

தர்மா புரொடக்ஷன்ஸ்
ஆனால், ஷாரூக் தரப்பில் இருந்து வழக்கம் போல எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தை, இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி அருமையான மசாலா கதை ஒன்றை கூறியிருப்பதாகவும் ஆனால் முழுக் கதையையும் அவர் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

முழு ஸ்கிரிப்ட்
இதையடுத்து முழு ஸ்கிரிப்டையும் உருவாக்கும் வேலையில் அட்லி ஈடுபட்டுள்ளார். அவரோடு தர்மா புரொடக்ஷன்ஸின் கிரியேட்டிவ் டீமும் இணைந்து திரைக்கதையை முழுமைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. தமிழ்-இந்தியில் உருவாக இருக்கும் இதன் கதை முழுமையடைய காலதாமதமானால் ஷாருக், வேறு படத்தில் நடித்துவிட்டு இந்தப் படத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











