Atlee: "சிவகார்த்திகேயனுக்கு மட்டும் தான் அந்த ரகசியம் தெரியும்..” அட்லீயின் லைஃப் டைம் சீக்ரெட்!
சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்ற அட்லீ, சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியிருந்தார்.
பான் இந்தியா படமாக உருவான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

இந்நிலையில் சமீபத்தில் அட்லீ கொடுத்த பேட்டியில், சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் பற்றி மனம் திறந்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படமாக அவர் இயக்கிய ராஜா ராணி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி வைத்தார் அட்லீ.
தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் விஜய் - அட்லீ கூட்டணி மாஸ் காட்டியது. இதனால், பாலிவுட் வரை செல்லும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. பாலிவுட்டில் முதல் படமே ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, ஜவான் மூலம் வெறித்தனமாக என்ட்ரி கொடுத்துள்ளார். 1100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ள ஜவான், பாலிவுட்டில் அட்லீக்கு மிகப் பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்துள்ளது.
ஜவான் வெற்றிக்குப் பின்னர் அட்லீ கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. அதில், அவரது வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார். அதாவது தனது வெற்றிக்கு முழு காரணமும் மனைவி பிரியா தான் என கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான ப்ரியா, சிங்கம் உட்பட பல படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அட்லீ - ப்ரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். உதவி இயக்குநராக இருக்கும் போதே ப்ரியாவை சந்தித்த அட்லீ, தனது காதலை சொல்லாமல் 8 ஆண்டுகள் வரை காத்திருந்தாராம். ராஜா ராணி மூலம் இயக்குநராக அறிமுகமான பின்னரே ப்ரியாவிடம் காதலை சொல்லியுள்ளார் அட்லீ. ஆனால், அவர் இதனை காமெடியாக எடுத்துக்கொள்ள, நேராக ப்ரியாவின் அம்மாவுக்கே போன் பண்ணி தனது காதல் குறித்து பேசியுள்ளார்.
இறுதியாக இரு வீட்டாரும் சந்தித்து ஒன்றரை மாதத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர் என அட்லீ கூறியுள்ளார். ஆனால், தான் ப்ரியாவை 8 ஆண்டுகளாக காதலித்த அந்த ரகசியம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே தெரியும். விஜய் டிவியில் சிவாவை பார்ப்பதற்காக சென்ற இடத்தில் தான் ப்ரியாவை சந்தித்தேன். அதனால் அடிக்கடி ப்ரியாவை பார்ப்பதற்காக செல்வது போல, ப்ரியாவையும் பார்த்து வருவேன் என்றுள்ளார் அட்லீ.


Click it and Unblock the Notifications











