Atlee son birthday: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்டமாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ.. செம பிக்ஸ்!
சென்னை: இயக்குநர் அட்லீ கடந்த ஆண்டு ஜவான் படத்தின் வெற்றியை மட்டுமின்றி தனது வாழ்வில் மறக்க முடியாத குழந்தை வரத்தையும் பெற்றார். கனா காணும் காலங்கள் சீரியல், சிங்கம் படம் என நடித்து வந்த நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அட்லீக்கும் பிரியாவுக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
ஒரே வருடத்தில் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்த அட்லீ இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தனது மகன் அதற்குள் ஒரு வயது ஆகிவிட்டானா என ஆச்சரியத்தில் பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

வெற்றி இயக்குநர்: இயக்குநர் அட்லீ இயக்கும் படங்கள் எல்லாமே ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் இன்ஸ்பிரேஷனாகவே உள்ளது என்றும் பல படங்களை காப்பியடித்து புதிதாக ஒரு படத்தை இயக்குகிறார் என்றும் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தாலும், அதையெல்லாம் அவரது பிளாக்பஸ்டர் வெற்றி முறியடித்து விடுகிறது. தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என வெற்றி இயக்குநராக வலம் வந்த அட்லீ பாலிவுட்டுக்கு சென்ற நிலையில், அங்கேயும் தான் ஒரு ஹிட் மெஷின் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்து விட்டார்.
தயாரிப்பாளர் அட்லீ: இந்தியில் படத்தை இயக்கியது மட்டுமின்றி அடுத்து பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி நடிப்பில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கவும் தொடங்கி விட்டார். தனது உதவி இயக்குநர் காலீஸ் அந்த படத்தை இயக்குகிறார். அடுத்து அட்லீ இயக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி ஹீரோ யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அல்லு அர்ஜுன் படம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து புதிய படம் எடுப்பேன் என்றும் அதற்கான ஸ்க்ரிப்ட் வொர்க் நடைபெற்று வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.
அட்லீ குழந்தைக்கு ஹேப்பி பர்த்டே: இந்நிலையில், கடந்த ஆண்டு அட்லீக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதன் முதலாவது பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் இடம்பெற்றுள்ள டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக தனது மனைவி பிரியாவுடன் சென்று கொண்டாடிய புகைப்படங்களையும் தனது மகன் மீரின் க்யூட்டான போட்டோக்களையும் அட்லீ வெளியிட்டுள்ளார். போடா போடி படத்தில் சிம்புவும் வரலக்ஷ்மி சரத்குமாரும் தங்களது குழந்தையின் பிறந்தநாளை டிஸ்னி லேண்டில் கொண்டாடுவது போல விக்னேஷ் சிவன் பாடல் காட்சியை அமைத்திருப்பார். அதே போல அட்லீ பிரியா அட்லீ மற்றும் குழந்தையுடன் அங்கே சென்று கொண்டாடியுள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து: அட்லீயின் குழந்தை தனது முதல் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், கொடுத்து வச்ச குழந்தை என்றும் செம க்யூட்டான இருக்கானே மீர் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ஜவான் படத்தின் வெற்றி அட்லீயை உலகளவில் அடையாளப்படுத்தி உள்ளதாகவும் விரைவில் பான் வேர்ல்ட் இயக்குநராகவும் அட்லீ மாறிவிடுவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஷங்கரின் இயக்குநராக இருந்து ஷங்கரை விட மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்த சிஷ்யன் அட்லீ மட்டும் தான் என்றும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











