குழந்தையின் ஹாட்பீட்டை போனில் கேட்டேன்.. மேடையில் கண் கலங்கி பேசிய அட்லீ!

சென்னை: அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற ஜவான், உலகம் முழுவதும் 500 கோடியை வசூலித்து பட்டையை கிளப்பி வருகிறது.

Atlee spoke at the Jawan music release that she heard the babys heartbeat on the phone

அட்லீ பேச்சு: ஜவான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இயக்குனர் அட்லீ, அனிரூத், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அட்லீ தனது மனைவி பிரியா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

பிரிந்ததே இல்லை: அதில், என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது ஜவான் படத்தின் வேலை விறுவிறுப்பாக நடந்துக்கொண்டு இருந்தது. ரொம்ப நாள் கழித்து கர்ப்பாக இருப்பதால், டாக்டர் எங்கையும் டிராவல் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நான் திருமணம் ஆனதில் இருந்து என் மனைவி பிரியாவை விட்டு பிரிந்து இருந்ததே. இல்லை. எங்கு போனாலும் அவள்கூடத்தான் போவேன்.

Atlee spoke at the Jawan music release that she heard the babys heartbeat on the phone

மகிழ்ச்சியான செய்தி: உடனே இந்த மகிழ்ச்சியான விஷயத்தை ஷாருக்கானிடம் கூறினேன், அவர் எந்த தயக்கமும் இல்லாமல் படப்பிடிப்பை தள்ளிவைத்துக்கொள்ளலாம் என்றார். இதை என் மனைவிடம் சொன்னோன், ஆனால், பிரியா எனக்காவது இது பத்து மாச சுமைதான், இந்த படம் உங்களின் மூன்று ஆண்டு சுமை, நான் என்னை பார்த்துக்கொள்கிறேன். நீங்க ஷூட்டிங் போங்க என்றார்.

ஹாட் பீட்டை கேட்டேன்: நான் படப்பிடிப்பில் இருந்தாலும், என் மனசு இங்கே தான் இருந்தது. அப்போது தான், பிரியா கால் பண்ணி, பாப்பாவின் ஹாட் பீட்டை கேளு என்றாள், ஒரு நிமிஷடம் ஆடிப்போய்விட்டேன். என் குழந்தையின் ஹாட்பீட்டை போனில் தான் முதலில் கேட்டேன். இது எல்லாம் உன்னாலத்தான் முடியும் நெகிழ்ந்து பேசி இருந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X