மும்முரமாகத் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் முதற்கட்ட பணிகள்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ.
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகர் விஜய்யுடன் தொடர்ந்து 3 படங்கள் பணியாற்றினார் அட்லீ.
தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் சாதனை
ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமான அட்லீ முதல் படத்திலேயே வெற்றியை பெற்றார். பின்னர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். விஜயுடன் அட்லீ இணைந்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்துள்ளது.

வியக்க வைத்தார்
வெறும் 4 படங்கள் மட்டும் இயக்கி கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்து விட்டார் அட்லீ. இதன் விளைவாக ஷாருக்கான் உடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்று பலரையும் வியக்க வைத்தார் அட்லீ.

உறுதி ஆகியுள்ளது
ஆனால் பல மாதங்கள் ஆகியும் அட்லீ - ஷாருக்கான் இணையும் படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்ததால் படம் கைவிடப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அட்லீ - ஷாருக்கான் காம்போ உறுதியாகியுள்ளது.

வருட இறுதியில்
பெரிய பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் இந்த வருடத்தின் இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











