Baby John Box Office: தெறி பேபி.. தளபதியை நம்பினோர் கைவிடப்படார்.. பேபி ஜான் முதல் நாள் வசூல்!

மும்பை: நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபு, ஜாக்கி ஷெராஃப், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ள படம் பேபி ஜான். பாலிவுட் படமான இந்த பேபி ஜான் படம், தமிழில் விஜய், சமந்தா நடித்து வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். தெறி படத்தினை தமிழில் இயக்கிய அட்லீ, இந்தியில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படம் கிருஸ்துமஸை முன்னிட்டு நேற்று அதாவது டிசம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியான படம் தெறி. இந்தப் படத்தினை அட்லீ இயக்கினார். படத்தில் விஜய், ஒரே கதாபாத்திரத்தில், இருவேறு வேடங்களில் நடித்திருப்பார். படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தில் விஜய்யின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நடித்தார். படம் வெளியாகி செம ஹிட் அடித்தது. குறிப்பாக புலி படத்தின் தோல்விக்குப் பின்னர் இந்தப் படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

baby john box office baby john keerthy suresh atlee

இப்படியான நிலையில் இந்தப் படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவும், அதனைத் தானே தயாரிக்கவும் முடிவு செய்தார் அட்லீ. இந்தியில் உருவான இந்தப் படத்திற்கு பேபி ஜான் என பெயர் சூட்டினர். விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவானும், வருண் தவான் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்ஷும் நடித்துள்ளார்கள். தெறி படத்தின் ரீமேக் தான் என்றாலும் ரசிகர்கள் பலர் தெறி படத்தையே ஹிந்தி டப்பிங்கில் பார்த்திருக்க கூடும். எனவே, இந்தி ரசிகர்களுக்கு ஏதுவாக, படத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

சல்மான் கான்: குறிப்பாக சல்மான் கான் கேமியோ கதாபாத்திரம், தமிழில் கிடையவே கிடையாது. ஆனால், இந்தி ரசிகர்களுக்கு படத்தினைப் பார்க்க சுவாரஸ்யத்தைக் கூட்ட, சல்மான் கான் கதாபாத்திரத்தினை சேர்த்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல், சல்மான் கான் ரசிகர்கள் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றார்கள். இது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு பிளஸாக அமைந்துவிட்டது.

baby john box office baby john keerthy suresh atlee

கீர்த்தி சுரேஷ்: படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படக்குழு புரோமோசன் பணிகளில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக, தனது திருமணம் முடிந்து சில நாட்களில் பேபி ஜான் படத்தின் புரோமோசன் பணிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். இவரது இந்த செயலைப் பார்த்து அனைவரும் பாராட்டினர். இந்தப் படத்தின் மூலம், கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமாகின்றார் என்பதால் அவரது, அற்பணிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

baby john box office baby john keerthy suresh atlee

வசூல்: படத்திற்கு இந்தி திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக அட்லீ தயாரிக்கும் படம் என்பதலே படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக படத்தில், சல்மான் கானின் கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளை அதிரவைத்துவிட்டது. படம் முதல் நாளில் ரூபாய் 13 கோடிகள் வரை இந்தியா முழுவதும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெறிவிக்கின்றன. இதுமட்டும் இல்லாமல், படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 16 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

baby john box office baby john keerthy suresh atlee

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் என கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.

baby john box office baby john keerthy suresh atlee

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X