Baby John Box Office: வசூல் மன்னன் விஜய்யின் தெறி ரீமேக் .. பேபி ஜான் எவ்வளவு வசூல் தெரியுமா?

மும்பை: இந்தியில் வெளியான பேபி ஜான் படத்தின் அப்டேட்டுகள் குறித்து தெரிந்து கொள்ள, தமிழ் நாட்டில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலே உள்ளது. அதற்கு காரணம், பேபி ஜான் படம், கடந்த 2016ஆம் ஆண்டு தமிழில், விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்தப் படத்தை தமிழில் இயக்கிய அட்லீ, இந்தியில் தயாரித்துள்ளார். இந்தியில் இந்தப் படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். படம் கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு வெளியானது. படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பேபி ஜான். இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் காலடி எடுத்து வைக்கின்றார், கீர்த்தி சுரேஷ். படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது இந்த கேமியோ கதாபாத்திரம் தமிழ் வெர்ஷனில் இல்லை. இந்தி ரசிகர்களின் ரசனைக்காக சல்மான் கான் கேமியோ கதாபாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. சல்மான் கான் கேமியோவில் நடித்துள்ளதைக் கேள்விப்பட்ட சல்மான் கானின் தீவிரமான ரசிகர்கள், படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவில் தியேட்டருக்குச் சென்று கொண்டு உள்ளார்கள்.

baby john box office baby john keerthy suresh atlee

ஏற்கனவே கூறியதுபோல், படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்க்கு இந்தப் படம்தான் முதல் நேரடி ஹிந்திப் படம். கடந்த 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், ஒரு வார காலத்திற்குள்ளாகவே, படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த புரோமோசன்கள் தொடங்கி, வெளிநாடுகளில் நடந்த புரோமோசன்களிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். இவரது அர்ப்பணிப்பைப் பார்த்து படக்குழுவினர் வியந்துபோனார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மகிழ்ச்சி: படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தைக் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக வருண் தவானின் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தரமான கமர்ஷியல் படம் ஒன்று கிடைத்துள்ளதால் தியேட்டரிலும் தியேட்டருக்கு வெளியேவும் கொண்டாடி வருகின்றனர். படக்குழுவினர் ரசிகர்களை தியேட்டரில் நேரடியாகவே சந்திப்பதால், ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பினை பாராட்டுகின்றனர். அதேபோல் தெறி படத்தின் இந்தி டப்பிங்கில் பார்த்த ரசிகர்களுக்கு சல்மான் கதாபாத்திரமும், வாமிகா கபி கதாபாத்திரமும் பிடித்திருப்பதாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

baby john box office baby john keerthy suresh atlee

ட்ரெண்ட்: படம் தென்னிந்தியாவில், வெளிநாடுகளிலும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இணையத்தில் கடந்த சில தினங்களாகவே பேபி ஜான் படத்தின் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். இவரது இசையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க எந்தவிதமான சம்பளமும் வாங்கவில்லை என கூறப்படுகின்றது. இதுவே பாலிவுட் உலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வசூல்: இப்படியான நிலையில் படம் கடந்த 25ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை அதற்கு முன்னர் அதாவது 24ஆம் தேதி இரவு ப்ரீமியர் ஷோவிலும் திரையிட்டனர். படம் ப்ரீமியர் ஷோவில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் படம் முதல் நாளில் ரூபாய் 13 கோடிகளும், இரண்டாவது நாளில் ரூபாய் 5 கோடிகளும், இந்திய அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. உலக அளவில் எடுத்துக்கொண்டால் படம் முதல் இரண்டு நாளில் ரூபாய் 20 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

baby john box office baby john keerthy suresh atlee

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X