தளபதி 69 தான் கடைசி.. அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய்.. படையெடுத்து வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்!
சென்னை: சொன்னா சொன்னபடி செய்ய வேண்டும் என்கிற கொள்கையுடன் 49 வயதிலேயே சினிமாவை தூக்கி எறிய முடிவெடுத்து அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் நடிகர் விஜய். இதுவரை இளைய தளபதி, தளபதி என இருந்தவர் இனிமேல் தலைவர் ஆக புரமோட் ஆகியுள்ளார். அவர் விரும்பும் அரசியல் நாற்காலி கிடைக்க அவர் தான் சரியாக பாடுபட வேண்டும். நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என அறிவித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சினிமா துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என லிஸ்ட்டே ரொம்ப பெருசாக போய்க் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வந்தாலே பலரும் படையெடுத்து வந்து வாழ்த்துவார்கள். இந்நிலையில், சினிமாவில் இருந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு பல சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களையும் கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

அட்லீ வாழ்த்து: நடிகர் விஜய் தனது கட்சி பெயரையும் 2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் அண்ணா என பதிவிட்டு இருக்கிறார். விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் படம் அப்போ வெளியாகாதா என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

பாடலாசிரியர் விவேக் வாழ்த்து: "வாழ்த்துகள் பேரன்புமிக்க விஜய் சார். #தவெக தமிழ் மக்கள் கையில் வாளாகவும் கேடயமாகவும் திகழும் என்ற நம்பிக்கையோடு, என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என வாழ்த்தி உள்ளார்.

வனிதா விஜயகுமார் ட்வீட்: ரொம்பவே துணிச்சலான தைரியமான முடிவு நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றியடைய என் வாழ்த்துகள் என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்: தளபதி விஜய்யை வைத்து கோட் படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தி விஜய்யின் அடுத்த பயணத்திற்கான முடிவை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கோட் படம் கண்டிப்பா 1000 கோடி வசூல் பண்ணும் என்றும் பான் இந்தியா ரிலீஸாக படத்தை வெளியிடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெரிய லிஸ்ட்: ராகவா லாரன்ஸ், சேரன், வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வரலக்ஷ்மி சரத்குமார், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் என ஏகப்பட்ட நடிகர்கள் பிக் பாஸ் பிரபலங்கள் என பலரும் விஜய்யின் அரசியல் வருகையை வாழ்த்தி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டில் உள்ள 15 ஓட்டும் விஜய்க்குத்தான் என்றும் உடனடியாக ஓட்டர் ஐடி எடுக்கப் போகிறேன் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தளபதி 69 தான் கடைசியா?: வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய் மார்ச் மாதத்துக்குள் அந்த படத்தை முடித்து விட்டு இந்த ஆண்டு இன்னொரு படத்தை முடித்து விட்டு அதன் பின்னர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைந்து விடுவார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்சியூவில் லியோவாக விஜய் அப்போ வரமாட்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











