அஜித் பட இயக்குநர் பிஸி.. விஜய் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் ரஜினி.. வெறித்தனம் கன்பார்ம்!

ரஜினியின் அடுத்தப் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினி, அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரி தான் படத்தின் கதை.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலேயே நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் விஸ்வாசம் பட வெற்றியால் அவர் சிவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியானது.

இயக்குநர் சிவா

இயக்குநர் சிவா

ஆனால், சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சிவா படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். அப்பட வேலைகளில் சிவா பிஸியாக இருக்கிறார். எனவே, அப்படத்தை முடித்த பிறகு தான் அவர் சூப்பர்ஸ்டாரை இயக்க முடியும். எனவே, இந்த இடைபட்ட காலத்தில் மீண்டும் முருகதாஸ் இயக்கத்திலேயே ரஜினி நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

அட்லீ இயக்கத்தில் ரஜினி

அட்லீ இயக்கத்தில் ரஜினி

தற்போது இந்தத் தகவலும் பொய் என்பது போல், மற்றொரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, தர்பாரைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் ரஜினி. அட்லீ தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை எடுத்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

சர்ச்சை இயக்குநர்

சர்ச்சை இயக்குநர்

எனவே, அப்படத்தைத் தொடர்ந்து ரஜினியை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதை திருட்டு உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உள்ளர். தொடர்ந்து அவரது படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

அதோடு சமீபகாலமாக ஷங்கரைப் போலவே அதிக செலவில் பிரம்மாண்டமாக அதிக செலவு செய்து காட்சிகளைப் படமாக்கி வருகிறார் அட்லீ. இதனால் அவரது படக்காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. இந்தக் காரணங்களால் தான், ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரசிகர்கள் யூகம்

ரசிகர்கள் யூகம்

ஏற்கனவே மெர்சல் படம் ரஜினியின் மூன்று முகம் படத்தின் கதை தான் என்ற சர்ச்சையில் சிக்கியது. தற்போது ரஜினியையே வைத்து அவர் இயக்குகிறார் என்றால், எந்த பழைய படத்தின் கதையைச் சுடப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலாக சமூகவலைதளங்களில் தங்களுக்கு தெரிந்த படங்களின் பெயர்களை வெளியிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X