ஆலமரம் சரிந்தது... அட்லி உருக்கமான ட்விட்டர் பதிவு !

சென்னை : இயக்குனர் அட்லியின் பெரியப்பா இறந்துவிட்டாக ட்விட்டர் பக்கத்தில் தனது சோகத்தை பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

தளபதியை வைத்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார் அட்லி.

ராஜாராணி வெற்றி

ராஜாராணி வெற்றி

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ, ஆர்யா, ஜெய், நயன்தாரா , நஸ்ரியாவை வைத்து ராஜாராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இயக்குநர் மட்டுமின்றி அந்தகாரம் உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஷாருக்கானை வைத்து

ஷாருக்கானை வைத்து

பிகில் பட வெற்றிக்குப் பின் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தனது பெரியப்பா மறைந்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.

ஆலமரம் சரிந்தது

ஆலமரம் சரிந்தது

தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் பெரியப்பா நீதிபதி சவுந்தர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது. எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். பெரியப்பா நீங்கள் எப்போதும் எங்கள் அரசர், எங்களின் முன் மாதிரி. உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையினர் ஆறுதல்

திரைத்துறையினர் ஆறுதல்

சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இயக்குநர் அட்லீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினர் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்திருக்கும் சோகம் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X