கடைசி நாளும் அதுவுமா மனைவியுடன் அத்திவரதரை தரிசித்த அட்லி
சென்னை: அத்திவரதரை குளத்தில் வைக்கும் முன்பு அவரை தரிசனம் செய்துள்ளார் இயக்குநர் அட்லி.
அத்திவரதரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இதையடுத்து அத்தி வரதர் குளத்தில் வைக்கப்படுவார்.

இந்நிலையில் இயக்குநர் அட்லி தனது மனைவி ப்ரியாவுடன் இன்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அட்லி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு அத்தி வரதரை தரிசிக்க சென்றுள்ளார். அவர் தனக்காக மட்டும் அல்ல பிகில் படம் வெற்றி பெறவும் நிச்சயம் பிரார்த்தனை செய்திருப்பார்.
இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்று விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் அட்லி அத்திவரதரை தரிசித்துள்ளார். பிகில் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
படம் குறித்து ஏதேதோ கிசுகிசுக்கள் வெளியான போதிலும் அட்லி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் உண்டு அவரின் வேலை உண்டு என்று இருக்கிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு பிகில் மூலம் பதில் அளிக்க விரும்புகிறாராம்.
பல ஆண்டுகள் கழித்து நயன்தாரா விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அட்லிக்கு ராசியான ஹீரோயின் நயன்தாரா. முன்னதாக நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











