Jawan - ஜவான் முதல் நாள் முதல் காட்சி.. தன் படையோடு வந்து மெர்சல் செய்த அட்லீ

சென்னை: Jawan (ஜவான்) ஜவான் படத்தில் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் அட்லீ பார்த்த புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர மற்ற இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவருக்கு நல்ல கெமிஸ்ட்ரியும் உருவாகிவிட்டது.

Atlee Watched Jawan Movie First Day First Show at Chennai Rohini Theatre

ஹிந்தியில் அட்லீ: சூழல் இப்படி இருக்க அட்லீ தனது ஐந்தாவது படத்தையும் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து இயக்க கமிட்டாகிவிட்டார். படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

படம் ரிலீஸ்; மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. எனவே இந்தப் படமும் அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுத்து முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடினார்கள்.

பாசிட்டிவ் விமர்சனம்: பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருப்பதாலும் படத்தின் மீது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஜவானுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே இதுவரை கொடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி அட்லீ தான் ஒரு சிறந்த மேக்கர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார் என்று கூறிவருகின்றனர்.

படம் பார்த்த அட்லீ: எனவே ஜவான் படம் அட்லீக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில படங்கள் அவர் பாலிவுட்டில் தொடர்ந்து இயக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் அட்லீ சென்னை ரோகிணி திரையரங்கில் ஜவான் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்தார். தனது மனைவி ப்ரியா, இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோரும் அட்லீயுடன் சேர்ந்து படம் பார்த்தனர். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X