உடைகிறது விஜய் - அட்லீ கூட்டணி.. பாலிவுட் பறக்க முடிவு.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

இயக்குனர் அட்லீ விரைவில் பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigil Trailer : Atlee Reaction : பிகில் டிரைலர் பார்த்த அட்லீ.. படக்குழுவிற்கு அட்வைஸ்!-வீடியோ

சென்னை: இயக்குனர் அட்லீ விரைவில் பாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் பாடம் பயின்றவர். இவரின் ராஜா ராணி ஹிட் ஆனதை அடுத்து வரிசையாக விஜய் உடன் இவர் படம் பண்ணினார்.

இவர் எடுத்த தெறி, மெர்சல் இரண்டு படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக இது மாறியது.

விஜய்

விஜய்

இந்த இரண்டு படங்களையும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மேக்கிங்கை பார்த்து அசந்து போன ஷாருக்கான் அது தொடர்பாக விஜயிடம் பேசி இருக்கிறார். அதேபோல் ஷாருக்கான் அட்லீயிடம் போனில் பேசி உள்ளார்.

என்ன சந்திப்பு

என்ன சந்திப்பு

இதையடுத்து சில மாதங்கள் முன் நடந்த விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது அட்லீ ஷாரூக்கானிடம் கதை சொல்லி இருக்கிறார். அப்போது ஷாருக்கான் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இந்த நிலையில் பிகில் படம் குறித்த அப்டேட்களை அவர்களை கேட்டுள்ளார். அந்த படத்தின் சில காட்சிகளையும் அவர் பார்த்துள்ளாராம். இதை பார்த்துவிட்டு அட்லீயின் படத்திற்கு அவர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

செம படம்

செம படம்

விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்கிறார்கள். புதிய கதையாக இருக்கும். விஜய் படத்தின் ரீமேக் கிடையாது. இந்த படம் திரில்லர் ஜானரில் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதில் சத்தியராஜ், நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

அதேபோல் தெலுங்கிலும் அட்லீ படம் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் எடுக்க உள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் விஜய் - அட்லீ கூட்டணி தற்காலிகமாக உடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X