Atlee - ஜவான் கொடுத்த வெற்றி.. அட்லீயின் அடுத்தக்கட்ட ப்ளான் இதுவா?.. முழு தகவல் உள்ளே

மும்பை: Atlee (அட்லீ) ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படம் ஹிட்டானதை அடுத்து அவரது அடுத்தக்கட்ட ப்ளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன் தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 80 கோடி ரூபாய்வரை வசூலித்தது. முதல் படத்திலேயே அதுவும் காதல் ஜானரில் படம் எடுத்து பெரும் ஹிட்டாக்கியதால் உடனடியாக கவனம் பெற்றார் அட்லீ. ஆனாலும் அந்தப் படம் மௌன ராகம் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று விமர்சனத்தை சந்தித்தது.

Atlee Will Direct Hollywood Movie here is the full details

விஜய்யுடன் பயணம்: ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாக அடுத்ததும் விஜய்யுடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இப்படி வரிசையாக மூன்று படங்கள் மெகா ஹிட்டானதால் மீண்டும் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.

ஹிந்தியில் அட்லீ: தமிழில் மொத்தம் நான்கு படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஹிந்தியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அவர் பாலிவுட்டில் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இதுவரை அந்தப் படம் உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலில் நெருங்கியிருக்கிறது.

தரமான மேக்கிங்: அட்லீ பிற படங்களிலிருந்து காப்பி அடித்துதான் தன்னுடைய படங்களை உருவாக்குகிறார் என்று ராஜா ராணியிலிருந்தே விமர்சனங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஜவான் படம்கூட காப்பிதான் என்று கூறப்பட்டது. இருந்தாலும் வணிக ரீதியாக ஒரு படம் வெற்றி பெற என்னவெல்லாம் வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார் அட்லீ. குறிப்பாக அவரின் மேக்கிங் தரம் வாய்ந்ததாக இருக்கும்.

அடுத்ததும் ஹிந்திதான்?: ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் வருண் தவானை வைத்து ஹிந்தியில் படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படம் தெறி படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில் அட்லீயின் புதிய ப்ளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது வருண் தவானுடனான படத்தை முடித்துவிட்டு ஹாலிவுட்டில் ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X