விஜய் - ஷாருக்கான் படமில்லையா?.. அட்லீ அடுத்து இந்த ஹீரோவை வைத்துத் தான் படம் இயக்கப் போகிறாரா?

சென்னை: இயக்குநர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய நிலையில், பல படங்களின் கலவையாக ரிலீஸ் ஆன அந்த படம் அப்படி இருந்தும் 1000 கோடி வசூலை அடைந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இந்த ஆண்டு ஷாருக்கான் பேக் டு பேக் 1000 கோடி படங்களை கொடுக்க சித்தார்த் ஆனந்தை தொடர்ந்து அட்லீயும் பெரிய காரணமாக இருந்த நிலையில், அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விட்டது.

Atlee will next direct Shah Rukh Khan and Kamal Haasan movie?

இந்நிலையில், அடுத்ததாக ஷாருக்கான் - விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் விஜய் நடிக்கப் போவதில்லை என அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன.

நான் காப்பிகேட் இயக்குநர் இல்லை: சமீபத்தில் நீயா நானா கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் அட்லீ நான் காப்பிகேட் இயக்குநர் இல்லை என்றும் எந்தவொரு படமாக இருந்தாலும், அதன் கதை சிம்பிளாத்தான் இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் ரசிகர்களை கனெக்ட் செய்யும் என்றும் திரைக்கதையில் மட்டுமே நம் வித்தையை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தன் மீது வைக்கப்பட்டு வரும் காப்பிகேட் இயக்குநர் சர்ச்சைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக நான் அப்படிப்பட்ட இயக்குநர் இல்லை என்றும் நான் பார்த்து வியந்த படங்களின் இன்ஸ்பிரேஷனில் தான் படங்களை உருவாக்கி வருகிறேன் என்றார்.

விஜய் - ஷாருக்கான் படம்: லியோ படத்தில் ஷாருக்கான் கேமியோ இருக்கு என்றும் ஜவான் படத்தில் விஜய் கேமியோ இருக்கு என ஏகப்பட்ட உருட்டுகள் உருட்டப்பட்டன. ஆனால், இரண்டு படங்களிலும் இருவரும் கேமியோவாக நடிக்கவில்லை. ஆனால், விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக அட்லீயே தகவல் தெரிவித்திருந்தார்.

ஷாருக்கான் - கமல்: இந்நிலையில், அரசியல் என்ட்ரி காரணமாக இப்போதைக்கு அட்லீ படத்தில் நடிக்க முடியாத நிலையில், விஜய் இருப்பதாகவும் அவருக்கு பதில் ஷாருக்கானை வைத்து அடுத்து அட்லீ இயக்க உள்ள படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

விஜய் நடித்த மெர்சல் படமே கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை தான் என கமலே கிண்டல் செய்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்க ஆண்டவர் ஆயத்தமாகி விட்டாராம். ஹேராம் படத்திற்கு பிறகு கமல் - ஷாருக்கான் மீண்டும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X