AK63: அஜித்தை இயக்குகிறாரா அட்லி.. தெறிக்கும் ஹாஷ்டேக்.. அப்போ விஜய் படம் என்ன ஆச்சு பாஸ்?

சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட்டே இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக ஏகே 63 படத்தின் அப்டேட் ஒன்று ட்விட்டரில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எப்படி படம் எடுக்கப் போகிறார் என்றும் பெரியளவில் அந்த படம் ரசிகர்களை கனெக்ட் செய்யுமா என கேள்விகள் எழுந்த நிலையில், உடனடியாக ஏகே63 ஹைப்பை ஆரம்பித்துள்ளனர்.

அதிலும், இயக்குநர் அட்லி அந்த படத்தை இயக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி கோலிவுட்டையே திணறச் செய்துள்ளது.

இந்த பக்கம் லோகேஷ்

இந்த பக்கம் லோகேஷ்

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என பிப்ரவரி 1,2,3 என லோகேஷ் கனகராஜ் ஹின்ட் கொடுத்த நிலையில், ஏகே 62 படத்தின் அப்டேட் எதுவுமே வரலையே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு உடனடியாக ஏகே 63 அப்டேட் தற்போது போட்டி அப்டேட்டாக டிரெண்டாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் அமைதி

விக்னேஷ் சிவன் அமைதி

நடிகர் அஜித் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் மீண்டும் சென்னை வந்தால் தான் ஏகே62 படத்தை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்க முடியும் என்கிற நிலையில், ஏகே 62 பற்றிய அப்டேட் எப்போ வரும் என்பதை சொல்ல முடியாமல் இயக்குநர் விக்னேஷ் சிவன் அமைதி காத்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் அஜித்

அட்லி இயக்கத்தில் அஜித்

இந்நிலையில், #AK63 ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஹைலைட் என்னவென்றால் அந்த படத்தை இயக்குநர் அட்லி எடுக்கப் போகிறார் என்பது தான். அட்லி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அஜித் நடிக்கப் போகிறார் என ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

விஷ்ணு வர்தன் பெயரும்

விஷ்ணு வர்தன் பெயரும்

இயக்குநர் அட்லி பெயர் மட்டுமின்றி ஏகே 63 படத்தை இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கப் போகிறார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. பில்லா படத்தை ரீமேக் செய்த விஷ்ணு வர்தன் அஜித்தை வைத்து பாட்ஷா 2 படத்தை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் படம் என்னாச்சு

விஜய் படம் என்னாச்சு

இயக்குநர் அட்லி ஷாருக்கானின் ஜவான் படத்தை முடித்து விட்டு மீண்டும் கோலிவுட் திரும்பி தனது குழந்தையை கொஞ்சி வரும் நிலையில், நடிகர் விஜய்யை வைத்து சன் பிக்சர்ஸில் 400 கோடிக்கு பிரம்மாண்டமாக எடுக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த படம் என்ன ஆச்சு? என்ன திடீரென அட்லி - அஜித் காம்பினேஷன் பேச்சுக்கள் அடிபடுகின்றன என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் அப்செட்

அஜித் ரசிகர்கள் அப்செட்

நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குநர் அட்லியை இதுவரை காப்பி இயக்குநர் என்றும் அவர் எடுத்த படங்களின் தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆள் அட்ரஸே காணாமல் போய் விட்டனர் என ட்ரோல் செய்து வந்த அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பு மட்டும் உண்மையான நம்மளோட நிலைமை என்ன என ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X