விஜய்க்காக இது கூட செய்ய மாட்டேனா? நேரடியாக களமிறங்கிய அட்லி.. மாஸ் காட்ட பிளான்!
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக இயக்குனர் அட்லி களத்தில் இறங்கி பணிகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக இயக்குனர் அட்லி களத்தில் இறங்கி பணிகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படத்தின் ஒரு பாடல் வெளியாகி உள்ள நிலையில் மீதமுள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

பெண்கள் முக்கியம்
முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகவும் இதில் நிறைய காட்சிகள், வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பாடல்
இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் விஜய் பாடிய ஒரு பாடல் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது.

தனியார் கல்லூரி
நேற்று காலைதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது. அங்கு இருக்கும் தனியார் கல்லூரியில் இந்த விழா நடக்க உள்ளது. விஜயின் தெறி மற்றும் மெர்சல் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாக்கள் இங்குதான் நடைபெற்றது.

என்ன செய்ய போகிறார்
இந்த நிலையில் இந்த விழாவிற்கான மேடையை இயக்குனர் அட்லியே முன்னின்று உருவாக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆம், இயக்குனர் அட்லி, இயக்குனர் ஷங்கரிடம் தனது வித்தைகளை கற்றவர். இதனால் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறாராம்.

எப்படி
இதற்காக அவரே கடந்த இரண்டு நாட்களாக விழா நடக்கும் இடத்திற்கு சென்று பணிகளை கவனித்து வருகிறார். இந்த விழாவில் முக்கியமான விஷயங்கள் சில நடக்க வாய்ப்புள்ளது. முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். அதனால்தான் அட்லியே களமிறங்கி பணியாற்றி வருகிறார் என்கிறார்கள்.

வேறு என்ன
அதேபோல் விஜய் - அட்லி இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து படம் பண்ண வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விஜய்க்காக இந்த பணியை தானே முன்னின்று செய்ய வேண்டும் என்று அட்லி முடிவு செய்து இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











