அட்லீயின் அடுத்த படம் தாமதமாவதற்கு இதுதான் காரணமா?.. இத்தனை கோடி சம்பளம் கேட்டா எப்படி பாஸ்?

சென்னை: 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை 2016 ஆம் ஆண்டு கொடுத்தார்.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மெர்சல் படத்தையும், 2019 ஆம் ஆண்டு பிகில் படத்தையும் கொடுத்த அட்லீ பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கான் படத்தை இயக்கி வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜவான் திரைப்படம் வெளியானது.

Atlee s high salary demand is the only reason for his next movie delay to take off

ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஜவான் திரைப்படம் அள்ளிய நிலையிலும் அடுத்து அட்லீ இயக்கப் போகும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லையே என்பது தான் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அட்லீ கேட்கும் பெரிய சம்பளம் தான் என்கின்றனர்.

குருவை மிஞ்சிய சிஷ்யன்: சிவாஜி, எந்திரன், நண்பன் உள்ளிட்ட பல படங்களில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் தான் அட்லீ. ஷங்கர் இயக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், குருவை மிஞ்சிய சிஷ்யனாக 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படத்தை கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். இந்திய சினிமாவில் ராஜமௌலிக்கு அடுத்து அட்லீதான் என்கிற அளவுக்கு மிகப்பெரிய இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

காப்பி சர்ச்சை: இயக்கத்தில் அட்லீ கெட்டிக்காரராக இருந்தாலும் அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாம் காப்பி சர்ச்சையில் சிக்கி வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 7 சுவரங்கள் தான் இசை என சொல்லிவிட்டு தான் பார்த்து இன்ஸ்பயர் ஆன படத்தில் இருந்து தான் கதையை உருவாக்குகிறேன் என சொல்லிவிடுகிறார். படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதால் டாப் இயக்குநராக அட்லீ மாறியுள்ளார். ஆனால், கதை உருவாக்குவதில் அவர் ரொம்பவே வீக் என்கின்றனர்.

அடுத்த படம் எப்போ?: அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் சல்மான் கான், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் ஜவான் படத்திற்கு பிறகு 2 ஆண்டுகளாக படத்தின் பூஜை கூட போடாமல் இருப்பது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீ படத்தை கைவிடவும் அவர் கேட்கும் அதிக சம்பளம் தான் என்கின்றனர். அதுதான் அவரது அடுத்த படம் உருவாக தடையாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.

100 கோடி சம்பளம்: ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை அட்லீ 100 கோடி ரூபாயாக ஏற்றி விட்டார் என்றும் அவ்வளவு பெரிய தொகையை இயக்குநருக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அல்லு அர்ஜுன் 300 கோடி சம்பளம் கேட்டு நிற்கிறார். இதுவே 400 கோடி வந்துவிட்டால் படத்தின் பட்ஜெட் மொத்தமாக 800 கோடிக்கு மேல் செல்வதால் தான் தாமதம் ஆவதாக கூறுகின்றனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர் சிக்கினால் தான் அட்லீயின் அடுத்த படம் உருவாகும் என்கின்றனர். ஆனால், அதெல்லாம் அட்லீக்கு எளிதில் கிடைத்துவிடுவார்கள் என்றும் வரும் ஜூன் மாதத்திற்குள் படம் ஆரம்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X